எப்பேர்ப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து இழுத்தாலும், சின்னத்திரை ரசிகர்களை தக்க வைக்க சேனல்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் சீரியல்கள் தான். காலம் காலமாக சீரியல்களுக்கு இருக்கும் மவுசு ஏறி கொண்டே செல்கிறது தவிர சற்றும் இறங்கவில்லை. இதற்கு காரணம் சீரியல்களுக்கு மக்கள் அடிக்டாக இருப்பது தான்.
எனவே ரசிகர்களை தக்க வைக்க சீரியல்கள் முக்கியமான ஒன்று என்பதை நன்றாக உணர்ந்துள்ள அனைத்து முன்னணி சேனல்களும், போட்டி போட்டு கொண்டு வித்தியாசமான கதைக்களங்களுடன் கூடிய சீரியல்களை ஒளிப்பரப்பி ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஏராளமான பொழுதுபோக்கு சேனல்கள் இருந்தாலும் சீரியல்கள் என்று வரும் போது சன் மற்றும் விஜய் டிவி தான் முதல் 2 இடங்களில் இருந்து வருகின்றன.
இவற்றுக்கு அடுத்து ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிறைவடைந்த யாரடி நீ மோகினி சீரியலுக்கு பிறகு, மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை களமிறக்கி உள்ளது ஜீ தமிழ். புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி, வித்யா நம்பர் 1, இரட்டை ரோஜா, பேரன்பு, தெய்வம் தந்த பூவே, அன்பே சிவம், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல சீரியல்கள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன
தற்போது ஸ்டார் விஜய் டிவி-யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமம் நடைபெற்று வரும் நிலையில், இன்று முதல் ஜீ தமிழ் சேனலும் சங்கமம் ஃபார்முலாவை கையில் எடுக்க உள்ளது. திரைப்படங்களின் பெயர்களை தாங்கி சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வரும் நிலையில், பிரபல சேனலாக இருந்து கொண்டிருக்கும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "அன்பே சிவம்" சூப்பர் ஹிட் சீரியல்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
Also Read : அமீர் கொடுத்த டார்ச்சரில் அதிரடி முடிவெடுத்த பாவ்னி.. அவரே வெளியிட்ட வீடியோ
மேலும் இதே சேனலில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான "ரஜினி"-யும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள சீரியலாக இருக்கிறது. இதில் திங்கள் - சனி வரை ரஜினி சீரியல் இரவு 9.30-க்கும், அன்பே சிவம் சீரியல் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வரும் இந்த 2 சூப்பர் ஹிட் சீரியல்களுக்கு இடையே தான் "சூப்பர் சங்கமம்" நடைபெற உள்ளது. இது தொடர்பான ப்ரமோ வீடியோ ஜீ தமிழின் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது.
Also Read : சூர்யா, விஜய் சேதுபதி, கமலை பின்னுக்கு தள்ளிய சிம்பு… இரண்டே ஆண்டுகளில் சாதனை
அந்த வீடியோவில் "இனி கொண்டாட்டம் தான்.. திருவிழா தான்.. இன்று முதல் இரவு 9.30 - 10.30 வரை, ரஜினி மற்றும் அன்பே சிவம் இணையும் சூப்பர் சங்கமம்.." என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 2 சீரியல்களின் தீவிர ரசிகர்களும் சூப்பர் சங்கமத்தை காண ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.