Home /News /entertainment /

சர்வைவர் சர்ச்சை: இனிகோ பிரபாகருக்கு ஆதரவு அளித்த லட்சுமி பிரியா

சர்வைவர் சர்ச்சை: இனிகோ பிரபாகருக்கு ஆதரவு அளித்த லட்சுமி பிரியா

இனிகோ பிரபாகர் - லட்சுமி பிரியா

இனிகோ பிரபாகர் - லட்சுமி பிரியா

சர்வைவர் நிகழ்ச்சியில் லட்சுமி பிரியா குறித்து இனிகோ பிரபாகர் ஆபாசமாக கமெண்ட் செய்ததாக ஐஸ்வர்யா ஒரு குண்டை தூக்கிபோட்டுள்ளார்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு வரும் ஒரு ரியாலிட்டி ஷோ ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர். பல்வேறு சாகச விளையாட்டுகளுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், தற்போது, விஜயலக்ஷ்மி, நாராயணன், அம்ஜத், ஐஸ்வர்யா, இனிகோ, விக்ராந்த், உமாபதி, வெனீசா உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனிகோ, லட்சுமி பிரியா குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்ததாக ஐஸ்வர்யா ஒரு குண்டை தூக்கிபோட்டுள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு டாஸ்க்கில் லட்சுமியை A வடிவ உயர கோபுரத்தில் பிடித்து தூக்கிவிட நேர்ந்த சம்பவம் தொடர்பாக கேமராவின் பின்னால் இனிகோ கொச்சையாக ஏதோ சொன்னதாக ஐஸ்வர்யா பகிரங்க குற்றச்சாட்டினை வைத்தார். ஆனால், இனிகோவிற்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது, அதனால் எதர்ச்சியாக கிராமத்து வழக்கில் சொன்ன ஒரு வார்த்தை தான் அது என்றும், வில்லங்கமான நோக்கத்தில் இல்லை எனவும் விஜி கூறியுள்ளார்.

    இருப்பினும், இனிகோ சொன்னது தவறு தான் என்று ஐஸ்வர்யா தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அதற்கு, பதிலளித்த இனிகோ, தான் எந்த ஒரு தப்பான நோக்கத்திலும் லட்சுமியை விமர்சிக்கவில்லை என்றும் தான் அப்படிப்பட்ட ஆள் இல்லை எனவும் கலங்கியுள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இனிகோவுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்த லட்சுமி பிரியா, “எனது பெயர் இழுக்கப்பட்டதால், நான் இனிகோவை ஆதரித்து இந்த பதிவை போட வேண்டும் என்று உணர்ந்தேன். அவர் தவறான நோக்கத்துடன் எதையும் சொல்லியிருக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

    திரையுலக பிரபலங்களைச் சுற்றியுள்ள மற்ற சர்ச்சைகளைப் போலவே, இந்த பிரச்சினையிலும் நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வந்தனர். ஆனால் அவரது இந்த பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து காரணமாக, சைபர் மிரட்டல் செய்யப்பட்டதற்கு எதிராக லட்சுமிப்ரியா புகார் பதிவு செய்திருக்கிறார்.

    இனிகோவை ஆதரித்து லக்ஷ்மிப்ரியாவின் பதிவிற்கு ஏ.எஸ். அருணா என்ற ட்விட்டர் யூசர் கமெண்ட் செய்திருந்ததாவது, "நீங்கள் பலாத்காரம் செய்யப்பட்டாலும், நான் அதை ரசித்ததால் ஏற்றுக்கொண்டேன் எனச் சொல்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் மிகவும் வெறுப்படைந்த லட்சுமி பிரியா, அந்த கணக்கை ரிப்போர்ட் செய்துள்ளார். பிறகு கொஞ்ச நேரத்தில் அந்த ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து லட்சுமி வெளியிட்ட பதிவானது, " @as_aruna மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கணக்கு நீக்கப்பட்டது போல் தெரிகிறது. அவரை போன்று கருத்து பதிவிட்ட மற்றவர்கள் மீதும் புகார் செய்வேன். தயவுசெய்து உங்கள் வரம்புகளைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த கணக்குக்கு எதிராக புகாரளித்தவர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.



    மீண்டும் மற்றொரு பதிவினை வெளியிட்ட லட்சுமி பிரியா, "ரியாலிட்டி ஷோ-வின் ஒரு பகுதியாக இருப்பதன் சோகமான உண்மை இது. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லத் தங்களுக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறார்கள். இது சைபர்புல்லிங். இந்தக் கணக்கை @as_aruna ரிப்போர்ட் செய்யுமாறும் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். #SurvivorTamil." என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்.



    மேலும் படிக்க - 'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ - வலிமை செகண்ட் சிங்கிள்!

    அடுத்த பதிவில், "எதிர்பார்த்தபடி அந்த ட்வீட் நீக்கப்பட்டதால், அதன் ஸ்கிரீன் ஷாட் இதோ. இதைத்தான் நான் புகார் செய்கிறேன். #saynotocyberbullying #SurvivorTamil" (sic) என லட்சுமி பதிவிட்டிருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Zee tamil

    அடுத்த செய்தி