• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விரைவில் பாய் சொல்லும் பிரபல சீரியல்..சோகத்தில் ரசிகர்கள்!

விரைவில் பாய் சொல்லும் பிரபல சீரியல்..சோகத்தில் ரசிகர்கள்!

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் சீரியல்

சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றில் கிளைமாக்ஸை தீர்மானிக்கும் பொறுப்பு ரசிகர்களிடம் கொடுக்கப்பட்டது.

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிரபல தமிழ் சேனலான ஜீ தமிழில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சுமார் 4 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஹிட் சீரியலாக இருந்து வருவது யாரடி நீ மோகினி சீரியல் தான்.

    ஜீ தமிழ் சேனல் சீரியல்களில் முதலிடத்தில் இருப்பதும் இந்த சீரியல் தான். அமானுஷ்யம் மற்றும் குடும்ப பாசம் நிறைந்த கதைகளத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தற்போது முடிவு கட்டத்தில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் 24, 2017-ம் ஆண்டு துவங்கிய இந்த யாரடி நீ மோகினி சீரியல் மிக விரைவில் முடிவடைய இருப்பது சின்னத்திரை ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்த வகையில் பல திருப்பங்களுடன் அதிரடியாக நகர்ந்து கொண்டிருந்த சீரியல் யாரடி நீ மோகினி.

    2017 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்திழுக்க காரணம் சீரியலில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு, ஆவி மற்றும் அதனையொட்டி நடக்கும் அமானுஷ்யங்கள், திகில், பரபரப்பான திருப்பங்கள் மற்றும் ஒரு மசாலா படம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவையே. இதனால் தான் "யாரடி நீ மோகினி" சீரியல் சின்னத்திரை ரசிகர்களை மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து மிகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியலாக இருந்து வரும் யாரடி நீ மோகினியின் கிளைமாக்ஸ் கூட ரசிகர்கள் வசம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது நினைவிருக்கலாம். தென்னிந்திய சீரியல் வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றில்  கிளைமாக்ஸை தீர்மானிக்கும் பொறுப்பு ரசிகர்களிடம் கொடுக்கப்பட்டது. 1200 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இதன் கிளைமாக்ஸூக்கு A), B), C) என்று மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இதில் எதற்கு ரசிகர்கள் அதிக ஓட்டளிக்கிறார்களோ அந்த ஆப்ஷன் கிளைமாக்ஸாக ஷூட் செய்யப்படும் என்று தயாரிப்பு நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    also read..இந்த சின்ன வயசுல சீரியலில் லீட் ரோல்.. மிகப்பெரிய வெற்றி! பொறாமைப்பட வைக்கும் சக்தி!

    இதனிடையே இந்த சீரியலில் டாக்டர்.அழகப்பன் கேரக்டரில் நடித்த தெய்வமகள் புகழ் நடிகர் அர்விந்த் , தனது மனதிற்கு நெருக்கமான இந்த சீரியல் வெகுவிரைவில் முடிவடைய உள்ளது குறித்து மிகவும் உணர்ச்சி பொங்க போட்டோ ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 (நாளை ) அன்று யாரடி நீ மோகினி வெற்றி விழா என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனல் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஷூட் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், இந்த வெற்றி விழா ஷோவில் சீரியலில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் பங்கேற்றனர், மேலும் இந்த ஷோவில் சீரியல் குழுவினர் அனைவரும் அழைத்து பாராட்டப்பட்டனர்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Actor Arvind 🎭 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arvindkat)






    இது தொடர்பான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து கொண்டுள்ள நடிகர் அர்விந்த் , "யாரடி நீ மோகினி பாராட்டு விழா என்ற கேப்ஷனுடன், இந்த நான்கரை வருட பயணத்தின் ஒரு பகுதியாக நான் இருந்ததற்கு மகிழ்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, டாக்டர் அழகப்பன் கேரக்டர், யாரடி நீ மோகினி சீரியல் குடும்பத்தினர் என அனைவரையும் மிஸ் செய்ய போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல ஜீ தமிழ் சார்பாக தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டு சான்றிதழையும் அந்த போட்டோவில் இணைத்துள்ளார் நடிகர் அரவிந்த். மேலும் நாளை ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை ஷேர் செய்து, "யாரடி நீ மோகினி" சாதனை விழாவை (ஆகஸ்ட் 15 மதியம் 3 மணி) பார்க்க தவறாதீர்கள என்றும் ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: