Home /News /entertainment /

வித்யாவை வீட்டைவிட்டு துரத்தும் வேதவள்ளி... சஞ்சய் எடுக்கப்போகும் முடிவு என்ன?

வித்யாவை வீட்டைவிட்டு துரத்தும் வேதவள்ளி... சஞ்சய் எடுக்கப்போகும் முடிவு என்ன?

வித்யா No 1

வித்யா No 1

சஞ்சய்க்கு பிறந்த நாள் வருவதால் அவருக்கு வாட்ச்சை கிப்ட்டாக கொடுக்க முடிவு செய்த வித்யா அதை வாங்க மாலுக்கு சென்ற போது அங்கு நடந்த போட்டியில் ஆண்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறுகிறார்.

  • News18
  • Last Updated :
    வித்யா No 1 சீரியலில் வித்யாவை வீட்டைவிட்டு துரத்தும் வேதவள்ளி, சஞ்சய் எடுக்கப்போகும் முடிவு என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

    வித்யா No 1 சீரியல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. படிப்பு தான் எல்லாமே என இருக்கும் வேதவள்ளி, அம்மா பேச்சை தட்டாத சஞ்சய் எதிர்பாராத சூழ்நிலைகளால் படிப்பறிவில்லாத வித்யாவை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ள அடுத்து என்னவெல்லாம் நடக்கிறது? என்பது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    சஞ்சய்க்கு பிறந்த நாள் வருவதால் அவருக்கு வாட்ச்சை கிப்ட்டாக கொடுக்க முடிவு செய்த வித்யா அதை வாங்க மாலுக்கு சென்ற போது அங்கு நடந்த போட்டியில் ஆண்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறுகிறார்.

    இதனையடுத்து பிறந்த நாள் பார்ட்டியில் வித்யாவுக்கு வில்லி குரூப் தண்ணீரில் மதுபானத்தை கலந்து விட இதை குடித்து விட்டு வித்யா ஆட்டம் போட அவருடைய குடும்பம் அவரை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறது. மனமுடைந்த வித்யா தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.

    Also read... வசூலில் கலக்கும் வீட்ல விசேஷம்... 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    இப்படியான நிலையில் அடுத்து சஞ்சய் என்ன முடிவு எடுக்க போகிறார்? வித்யாவை காப்பாற்றி மனைவியாக ஏற்று கொள்வாரா? இல்லையா? என விறுவிறுப்பான திருப்பங்களுடன் இனி வரும் நாட்களில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Zee tamil

    அடுத்த செய்தி