முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vidhya No 1 சீரியல் குழுவினர் கொண்டாட்டம் - காரணம் தெரியுமா.?

Vidhya No 1 சீரியல் குழுவினர் கொண்டாட்டம் - காரணம் தெரியுமா.?

Vidhya No 1

Vidhya No 1

Vidhya No 1 | வித்யா நம்பர் ஒன் சீரியல் இரண்டு பெண்களை சுற்றி நடக்கும் கதை. இதில் இரண்டு பெண்களுக்கும் கல்வி பற்றிய ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் பல்வேறு தமிழ் சேனலிலும் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கின. கொரோனாவின் தாக்குதல் குறைந்து பழைய சீரியல்கள் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஒளிபரப்பான நிலையில், ஒரு சில சீரியலை தொடர முடியாமலும் சீரியல் குழுவினர் அப்படியே விட்டு விட்டனர். அதற்கு மாற்றாக தான் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கின. அதில் ஒன்று ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் ஒன் என்ற சீரியல்.

பெயரே வித்தியாசமாக இருக்கிறதே, எனவும் கதையும் சீரியலும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை வித்யா நம்பர் ஒன் சீரியல் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியது. வித்யா நம்பர் ஒன் சீரியல் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது என்பதன் அறிகுறியாக சமீபத்தில் நூறாவது நாள் எபிசோட் ஒளிபரப்பானதை சீரியல் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

வித்யா நம்பர் ஒன் சீரியல் இரண்டு பெண்களை சுற்றி நடக்கும் கதை. இதில் இரண்டு பெண்களுக்கும் கல்வி பற்றிய ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்த நிகாரிகா என்ற நடிகை இந்த சீரியலில் வேதவள்ளி என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். வேதவள்ளி மிகப்பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட் மற்றும் இவருடைய கண்ணோட்டத்தில் கல்வி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது என்று கதை அமைந்துள்ளது.

இவரின் மருமகளாக வித்யா என்ற பாத்திரத்தில் தேஜஸ்வினி கவுடா நடிக்கிறார். வித்யா படிக்காத பெண்ணாக இருந்தாலும் இவரின் அறிவைக் கண்டு வேதவள்ளி வியந்து போகிறார். வேதவள்ளியின் மகனாக சஞ்சய் என்ற பாத்திரத்தில் பிரபல யூடியூபரான இனியன் நடித்து வந்தார். 70 எபிசோட்கள் வரை இனியன் நடித்தபோது இடையில் திடீரென்று சீரியலில் இருந்து விலகி விட்டார். அதற்கு பிறகு ஜீ தமிழின் ஆஸ்தான நடிகரான புவியரசு தற்போது சஞ்சய்யாக நடித்து வருகிறார்.

Also Read : எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பாலாக்குள்ள இப்படி ஒரு கஷ்டமா!

முதன்முறையாக இனியன் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்பது இளைஞர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால் இவருடைய யூடியூப் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேபோல சீரியல் பார்வையாளர்களையும் ஈர்ப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், காயம் காரணமாக ஒரு சில வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் சீரியலைத் தொடர முடியாமல் விலகி விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

Also Read : பிரபல நடிகையின் ரூ. 7 கோடி சொத்துகள் முடக்கம்..

நடிகர் நடிகைகள் ஸ்டார் வேல்யூ இருந்தாலும், கதைக்களம் ஓரளவுக்கு நன்றாக இருந்தால் மட்டுமே இப்பொழுது டிஆர்பி ரேட்டிங் ஓரளவாவது பெற முடியும். அது மட்டுமின்றி, அப்போது தான் தொடர்ந்து சீரியலைப் பார்ப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)



எனவே தொய்வில்லாமல் தொடர்ச்சியாக 100 நாட்கள் வரை எபிசோடுகள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை உணர்த்துகிறது. வித்யா நம்பர் ஒன் சீரியலின் 100வது எபிசோடு ஒளிபரப்பானதை முன்னிட்டு சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

First published:

Tags: Entertainment, TV Serial, Zee tamil