• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகையாக அவதாரம் எடுக்கும் நீச்சல் வீராங்கனை... எந்த சீரியலில் தெரியுமா?

நடிகையாக அவதாரம் எடுக்கும் நீச்சல் வீராங்கனை... எந்த சீரியலில் தெரியுமா?

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்கும் ஜனனி

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்கும் ஜனனி

நீச்சல் வீராங்கனையாகவும் ஜொலித்த ஜனனி, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

  • Share this:
    மாடலிங், நீச்சல் போட்டிகளில் பரிசுகளை குவித்த ஜனனி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிகையாகவும் மாறியுள்ளார்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் நினைத்தாலே இனிக்கும் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் ஜனனி பிரபு. என்ஜியரிங் படித்து முடித்த அவர், மாடலிங் துறையிலும் கால்பதித்தார். 2018 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்று அசத்தினார். நீச்சல் வீராங்கனையாகவும் ஜொலித்த ஜனனி, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

    முதன்முறையாக சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதால் ஜனனி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் புரோமோவை பகிர்ந்துள்ள அவர், அதில் தான் நடிக்க இருப்பதையும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிப்பு துறையில் கால்பதித்துள்ள தனக்கு ரசிகர்கள் தொர்ந்து அன்பையும் ஆதரவையும் கொடுக்க வேண்டும் என ஜனனி கேட்டுக்கொண்டுள்ளார். நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நளினி என்ற கதாப்பாத்திரத்தில் ஜனனி நடிக்கிறார்.

    லீட் ரோலில் விஜய் டிவி ஆயுத எழுத்து சீரியல் புகழ் ஆனந்த் செல்வன் நடிக்கிறார். இவருடன் ஸ்வாதி, நேகா, தீப்தி ராஜேந்திரன் மற்றும் மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதேபோல், நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவும் நடிக்க உள்ளார். சுரேஷ் கி நடிகை அனுராதவின் கணவர் தான் சுரேஷ்கிருஷ்ணா, இவர் சன் தொலைக்காட்சியில் முதன்முதலாக முத்தாராம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். அசோகவனம்,உயிர்மை, தெய்வம் தந்த வீடு, சிவசங்கரி,சந்திரலேகா என ஏராளமான சீரியலில் நடித்துள்ளார்

    aloso read... தேவையானி ஃபிளாட்டுக்கு வரும் நடிகை நமீதா... 1 வாரத்திற்கு தங்க போகிறார்!

    நினைத்தாலே இனிக்கும் சீரியலின் புரோமோ அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக இருந்தயாரடி நீ மோகினி சீரியல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. 2 ஆம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த கதைக்கு முடிவுரையை எழுதிவிட்டு புதிய கதைக்களத்துடன் நினைத்தாலே இனிக்கும் சீரியல் களமிறக்கப்பட உள்ளது. யாரடி நீ மோகினி சீரியலை தயாரித்த மான்க் நிறுவனமே இந்த சீரியலையும் தயாரிக்கிறது.



    மேலும், அந்த சீரியல் படமாக்கப்பட்ட சூட்டிங் ஸ்பாட்டிலேயே புதிய சீரியலுக்கான பூஜையும் போடப்பட்டதால், நிச்சயமாக யாரடி நீ மோகினி சீரியலின் 2ம் பாகம் என தகவல்கள் பரவியது. ஆனால், அது உண்மையல்ல என சீரியல் குழுவினர் உறுதிபடுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் புத்தம் புதிய சீரியலான நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. யாரடி நீ மோகினி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்த நிலையில், அந்த இடத்தை நினைத்தாலே இனிக்கும் சீரியல் பிடிக்கும் என நாடகக் குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: