• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் சென்ற அந்த நடிகர்... சந்தோஷத்தில் ரசிகர்களுக்கு சொன்ன நியூஸ்!

விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் சென்ற அந்த நடிகர்... சந்தோஷத்தில் ரசிகர்களுக்கு சொன்ன நியூஸ்!

சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன்

சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன்

தந்தையின் விருப்பப்படி ஸ்வீட் ஸ்டால் அமைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து பம்பரமாக சுழல்கிறார்.

  • Share this:
    ஆனந்த் செல்வன் லீட் ரோலில் நடிக்கும் நினைதாலே இனிக்கும் என்ற புத்தம் புதிய சீரியல் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளதாக ஜீ தமிழ் அறிவித்துள்ளது.

    சன், விஜய் டீவி முதல் ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் சேனல்கள் இம்மாதம் முதல் புத்தம் புதிய மற்றும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்ப உள்ளன. விஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு போட்டியாக பிரம்மாண்டமான ’சர்வைவர்’ என்ற புத்தம் புது நிகழ்ச்சியை ஜீ தமிழ் தயாரித்து வருகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுப்பாளராக களமிறங்குகிறார். தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனித்தீவு ஒன்றில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சவால் மற்றும் கடுமையான டாஸ்க்குகள் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த 20 பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் புத்தம் புதிய சீரியலையும் ஜீ தமிழ் ஒளிபரப்பாக்க உள்ளது. நடிகர் ஆனந்த் செல்வன் லீட் ரோலில் நடிக்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஆனந்த் செல்வன் சித்தார்த் என்ற கதாப்பாத்திரத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவராக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ஸ்வேதா’ பொம்மி கதாப்பாத்திரத்தில் அறிமுகமாக உள்ளார். அதிரசம் தயாரிக்கும் ஏழை குடும்பத்துப் பெண்ணான அவர், தானே அதிரசம் தயாரித்து இருச்சக்கர வாகனம் மூலம் சென்னை முழுவதும் விற்பனை செய்கிறார். தனது தந்தையின் விருப்பப்படி ஸ்வீட் ஸ்டால் அமைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து பம்பரமாக சுழல்கிறார்.

    பார்க்கும் அனைவருடனும் எளிமையாகவும், புன்னகை ததும்ப பேசும் அவருக்கும், பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆனந்த் செல்வனுக்கும் இடையே உருவாகும் காதலைக் கொண்டு தொடர் பயணிக்க உள்ளது. தமன்னா கதாப்பாத்திரத்தில் நேகா ஷா நடிக்கிறார். ஜனனி பிரபு நளினியாகவும், இவர்களுடன் மிதுன்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சீரியல் ஒளிபரப்பு குறித்து பேசிய சிஜூ பிரபாகரன், நினைத்தாலே இனிக்கும் சீரியல், இளம் பெண் ஒருவர் தன்னுடைய இலக்கை அடையும் பயணித்தில் எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்து சாதிப்பதை குறித்து பேசும் தொடர் என கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்போதைய நிலையில், இந்த சீரியல் பலருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும் தொடராக இருக்கும் என்றும் பிரபாகரன் கூறினார். நளினியாக நடிக்கும் ஜனனி பிரபு, முதன்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்க உள்ளார். படிக்கும்போதே மாடலிங் மற்றும் நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்த அவர், 2018ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்று அசத்தினார். நீச்சல் வீராங்கனையான ஜனனி, தேசிய அளவில் பல முக்கிய பட்டங்களையும், விருதுகளையும் கைப்பற்றியுள்ளார். அவரைப் போலவே பல்வேறு புதுமுகங்களும் அறிமுகமாகும் தொடராக நினைத்தாலே இனிக்கும் சீரியல் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: