சின்னத்திரையில் ஒரு டாக்டர் நடிகை... நீதானே என் பொன்வசந்தம் லீட் ரோல் அனு!

ஜீ தமிழ் சீரியல் நீதானே பொன்வசந்தம்

வந்த கொஞ்ச நாட்களிலே இளைஞர்களை கவர்ந்து ஃபேவரெட் சீரியல் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார்.

 • Share this:
  ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் நீதானே என் பொன்வசந்தம் சீரியல் அனு இளைஞர்களுக்கு பிடித்தமான சின்னத்திரை நாயகி இடத்தைப் பிடித்துள்ளார்.

  சின்னத்திரை நடிகர், நடிகைகள் பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது இன்று சகஜமான ஒன்றாகி விட்டது. இதன்மூலம் அவர்கள் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாகிவிடுகின்றனர். ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் வலம் வரும் இளம் கதாநாயகிகள் இளைஞர்கள் மத்தியில் எளிதில் ஃபேமஸ் ஆகிவிடுகின்றனர்.

  அதில் குறிப்பிடும்படியான ஒருவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நீதானே என் பொன்வசந்தம் அனு. இவரின் ரியல் நேம் தர்ஷனா இவர் ஒரு பல்மருத்துவர் ஆவார்.

  இவரின் சொந்த ஊர் குன்னூர். படித்தது வளர்ந்தது சென்னையில் தான்.இங்கு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சில போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவார். தனது நண்பர்களுடன் சேர்ந்து மாடலிங்கும் அவ்வப்போது செய்து வந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு ஜீ தமிழின் நீதானே என் பொன்வசந்தம் ஆஃபர் தேடி வந்தது. ஆனால் முழு குடும்பமும் மருத்துவர்கள் என்பதால் தர்ஷனாவும் மருத்துவ சேவையை செய்ய வேண்டும் என்று அவரின் அப்பா ஆசைப்பட்டுள்ளார்.

  இருப்பினும் தனக்கு சினிமா மேல் இருக்கும் ஆசையைக்காட்டி குடும்பத்தாரை சம்மதிக்க வைத்து சின்னத்திரையில் கால் பதித்தார் தர்ஷா. வந்த கொஞ்ச நாட்களிலே இளைஞர்களை கவர்ந்து ஃபேவரெட் சீரியல் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Dr.Dharshana Asokan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dharshana_ashokan)


  இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோதே ஜோதேயலி’ என்ற தொடரின் ரீமேக் தான் ’நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியல்.

  தற்போது 300 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அனுவின் கேரடக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா-அனு காதல் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.
  Published by:Sreeja Sreeja
  First published: