சன்டிவி சீரியலில் நடிக்கும் ஜீ தமிழ் நடிகை! புதிய சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடி இந்த நடிகையா? -

சைத்ரா ரெட்டி

யாரடி நீ மோகினியில் நடித்த சைத்ரா ரெட்டி தற்போது முதன் முறையாக சன் டிவியில் நடிக்க இருக்கிறார். சஞ்சீவ் மற்றும் சைத்ரா நடிக்க இருக்கும் இந்த சீரியலின் பெயர் கயல் என்றும் செய்தி வெளியானது.

  • Share this:
ஜீ தமிழ் சீரியல் புகழ் நடிகை சைத்ரா ரெட்டி சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கிறார்.

ஒரு சேனலில் இருந்து மற்றொரு சேனலுக்கு நடிகர்கள் மாறுவது இயல்பே. அந்த விதத்தில், இரண்டு வெவ்வேறு சேனல்களில் இருந்து நடிகர்கள் சன் டிவியின் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் ஜோடியாக, ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி, நடிக்கவுள்ளார். ஜீ தமிழின் மிகப்பெரிய ஹிட் சீரியலான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த சைத்ரா ரெட்டி மிகவும் பிரபலமானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது சீரியல் முடிந்துள்ள நிலையில், உடனேயே சன் டிவியின் அடுத்த புதிய சீரியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சீரியலில், சஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். நடிகர் சஞ்சீவ், தொலைக்காட்சியில் அறிமுகமாகும் முன்பு, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுகமானத் திரைப்படம் குளிர் 100 டிகிரி. இந்த படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், நீயும் நானும், சகாக்கள் போன்ற திரைப்படங்களில் நடித்தவர், கொஞ்சம் இடைவெளிவிட்டு சீரியலில் அறிமுகமானார்.

Also read... Bharathi Kannamma: கண்ணம்மாவை வீட்டுக்கு அழைக்கும் பாரதி!

விஜய் டிவியில் தனது முதல் சீரியலான ராஜா ராணியில் அறிமுகமான இவர், பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றார். சீரியலில் உடன் நடித்த ஆல்யா மானசாவை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆய்லா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. அடுத்ததாக, காற்றின் மொழி சீரியலில் நடித்த சஞ்சீவ். தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து, சஞ்சீவின் ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வியும், சீரியலின் பெயர் என்ன என்ற கேள்வியும் எழும்பிய வண்ணம் இருந்தன. இந்நிலையில், சஞ்சீவ் ஜோடியாக ஜீ தமிழ் சீரியலில் நடித்த நடிகை நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது.அந்த நடிகை யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. யாரடி நீ மோகினியில் நடித்த சைத்ரா ரெட்டி தற்போது முதன் முறையாக சன் டிவியில் நடிக்க இருக்கிறார். சஞ்சீவ் மற்றும் சைத்ரா நடிக்க இருக்கும் இந்த சீரியலின் பெயர் கயல் என்றும் செய்தி வெளியானது. சமீபத்தில், யாரடி நீ மோகினி சீரியல் முடிவு பெற்ற செய்தியை, உடன் நடிப்பவர்களுடன் எடுத்த செல்ஃபிக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது. புதிய சீரியலின் படப்படிப்பு ஆரம்பமானதை, சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)


கயல் சீரியல் சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது என்றும் சீரியல் குழு அறிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: