Home /News /entertainment /

Endrendrum Punnagai சீரியல் முடியப் போகிறதா.? வைரலாகும் கிளைமேக்ஸ் ஷூட்டிங் புகைப்படம்!

Endrendrum Punnagai சீரியல் முடியப் போகிறதா.? வைரலாகும் கிளைமேக்ஸ் ஷூட்டிங் புகைப்படம்!

endrendrum punnagai

endrendrum punnagai

Endrendrum Punnagai Serial | சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென சீரியலை முடிக்க போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கிளைமாக்ஸ் எபிசோடில் சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
பல்வேறு தமிழ் சேனல்களில் நாள் முழுவதும் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சேனலிலும் சூப்பர் ஹிட்டான ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், TRPயில் போட்டி போட்டுக்கொண்டு இருந்தாலும், பெரிதாக வரவேற்பு பெறாத சீரியல்களும் உள்ளன. சமீபத்திய ட்ரெண்டாக பார்வையாளரிடம் சரியாக வரவேற்பு பெறாத அல்லது டி ஆர் பி ரேட்டிங்கில் குறைவான ரேட்டிங் பெற்ற சீரியல்களுக்கு முடிவு கட்டி வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் மாதம் தொடங்கப்பட்ட 'என்றென்றும் புன்னகை' என்ற சீரியலும் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. கிளைமாக்ஸ் எபிசோடு ஷூட்டிங் எடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

கலர்ஸ் தமிழில் இருந்து நடிகர் தீபக் குமார் மற்றும் நடிகை நட்சத்திரா ஆகிய இருவரும் ஜீ தமிழில் இந்த சீரியல் மூலம் அறிமுகம் ஆனார்கள். மார்ச் 16 ஆம் தேதி 2020 ம் ஆண்டு தொடங்கிய என்றென்றும் புன்னகை சீரியல் சில வாரங்களுக்கு முன்புதான் இரண்டு ஆண்டுகளை கடந்தது என்று, சீரியல் குழுவினர் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென சீரியலை முடிக்க போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கிளைமாக்ஸ் எபிசோடில் சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)






ஜீ தமிழில் 'என்றென்றும் புன்னகை' சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மங்கம்மா காரி முனவாரலு' என்கிற தெலுங்கு சீரியலின் கதையை தழுவி எடுக்கப்படும் ஒரு நாடகமே ஆகும்.

Also Read : படப்பிடிப்பு தளத்தில் மோதிக்கொண்ட சூர்யா - பாலா.?

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இல்லை என்றாலும் என்றென்றும் புன்னகை சீரியலுக்கு கணிசமான பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் சீரியலில் நாயகனாக நடித்து வந்த நடிகர் தீபக் குமார் ஒரு சில காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து விஷ்ணு காந்த் என்பவர் சீரியலில் நாயகனாக நடித்துவந்தார்.

Also Read : தனது வாழ்க்கை பற்றி லைவில் பேசிய தேவயானி.. ஷாக்கில் குடும்பம்!

நடிகர் தீபக் குமாருக்கு சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் திடீரென விலகியதாலே சீரியலுக்கு வரவேற்பு குறைந்து விட்டது என்று பலரும் கூறி வந்தனர். திருமணம் செய்ய சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட தீபக் குமார் மீண்டும் கலர்ஸ் தமிழுக்கு சென்று விட்டார். என்றென்றும் புன்னகை சீரியலில் முதன் முதலில் ஹீரோவாக விஷ்ணுகாந்த் நடிக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு விஷ்ணுகாந்த பழகிய முகம் என்றாலும், ஹீரோவாக இதுவே முதல் சீரியல். ஆனால், சீரியலில் நடிக்கத் தொடங்கி ஓரிரு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், சீரியல் முடியப்போகிறது என்பது வருத்தத்திற்குரியது.
Published by:Selvi M
First published:

Tags: TV Serial, Zee tamil

அடுத்த செய்தி