Sembaruthi Shabana: விஜய் டிவி சீரியல் நடிகருடன் ’செம்பருத்தி’ ஷபானா காதல்?

செம்பருத்தி சீரியல் ஷபானா

அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், இப்போது அதில் சிறிது வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.

  • Share this:
    செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவும், பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யனும் காதலிப்பதாக தெரிகிறது.

    நடிகை ஷபானாவின் ரிலேஷன்ஷிப் குறித்து நிறைய வதந்திகள் வந்துள்ளன. சமீபத்தில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் புகழ், நடிகர் ஆர்யனை அவர் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், இப்போது அதில் சிறிது வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.

    Sembaruthi Serial Shabana in love with Baakiyalakshmi serial Aryan

    zee tamil Sembaruthi Serial Shabana in love with vijay tv Baakiyalakshmi serial Aryan
    ஆர்யன்


    இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்யனிடம், “நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா?” என ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன். “ஷபானா... இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” எனக் கேட்டிருந்தார். இதனை தன் பக்கத்தில் பகிர்ந்த ஷபானா, ‘மைன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதன் மூலம் ஷபானாவும் ஆர்யாவும் காதலில் இருப்பதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: