• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களின் ஆதரவோடு தனது படப்பிடிப்பை தொடங்கிய செம்பருத்தி சீரியல் நடிகர்!

ரசிகர்களின் ஆதரவோடு தனது படப்பிடிப்பை தொடங்கிய செம்பருத்தி சீரியல் நடிகர்!

கார்த்திக் ராஜ்

கார்த்திக் ராஜ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்தார் கார்த்திக் ராஜ்.

  • Share this:
    செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ், கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார். பல மாதங்கள் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக தனது படத்திற்கான வேலைகள் ஆரம்பமானதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்திக்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான அவர், அடுத்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆஃபீஸ்’ தொலைக்காட்சியில் லீட் ரோலில் நடித்தார். இவரும் ஸ்ருதி ராஜூம் இணைந்து நடித்த காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, தொடரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்தார். இந்த சீரியலிலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார். அதிலும் சீரியல் டிஆர்பி-யில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது.

    அதற்கு ஒரு காரணம் கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானாவின் காதல் காம்போ தான். இந்த நிலையில் கார்த்திக் ராஜ் 2020 டிசம்பர் மாதம் சில காரணங்களால் செம்பருத்தி தொடரிலிருந்து விலகினார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், படத்தில் நடிப்பதற்காக சீரியலை விட்டு விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்ட கார்த்திக் ராஜ், தன்னை படங்களில் நடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக குற்றம்சாட்டினார். தான் நடிக்க இருந்த ப்ராஜெக்ட்டுகளில் சிலர் பின்வேலைகள் பார்த்து தடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஆனால், அவர்களின் சவால்களை முறியடித்து நிச்சயம் திரைப்படத்தில் நடிப்பேன் என கூறியுள்ள அவர், தானே சொந்தமாக திரைப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாகவும் கூறினார். அதற்காக, ரசிகர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், அதற்கான வங்கிக் கணக்கு எண் விவரங்களையும் வெளியிட்டார். சிறிய தொகையாக இருந்தாலும் சரி, எவ்வளவு முடியுமோ அந்த தொகையை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். பிறகு மீண்டும் சில மதத்திற்கு பிறகு மற்றொரு வீடியோ வெளியிட்ட அவர், நிதி பற்றாக்குறை பற்றி மேலும் விளக்கினார். தன்னை சினிமாவில் வெற்றி பெறக்கூடாது என நினைப்பவர்களை ஜெயித்துக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதற்காக, தான் கேட்டுக்கொண்டதன் பேரில் நிதியுதவி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள கார்த்திக் ராஜ், இந்த நிதி போதுமானதாக இல்லை எனக் கூறியுள்ளார். 2 கோடி தேவைப்பட்டிருந்த நிலையில் தற்போது சுமார் 7 முதல் 8 லட்சமே கிடைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய ரசிகர்கள் 1 லட்சம் பேர் 200 ரூபாய் அனுப்பினால் கூட தனக்கு தேவையான தொகை கிடைத்துவிடும் என தெரிவித்த அவர், போதுமான தொகை கிடைக்கவில்லை என்றால் வாங்கிய பணத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். யாரையும் ஏமாற்றும் நோக்கம் என்னுடையதல்ல.




    என்னுடைய இலக்கை அடைய தேவையான தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் இருப்பதாகவும், நிச்சயம் அந்த தொகை கிடைத்தால் நல்ல தரமான படத்தை எடுப்பேன் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக் தனது படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நடிகர் கார்த்திக் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, எங்கள் திரைப்படத்தின் முதல் ஷெட்யூலைத் தொடங்கிவிட்டோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை என பதிவிட்டிருந்தார். மேலும் படத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். இவரது பதிவுக்கு கார்த்திக் ராஜின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: