Sembaruthi Serial: 1000 எபிசோட்களைக் கடந்த ‘செம்பருத்தி’!

Sembaruthi Serial: 1000 எபிசோட்களைக் கடந்த ‘செம்பருத்தி’!

செம்பருத்தி சீரியல் ஷபானா

அக்டோபர் 16, 2017 அன்று முதல் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான, செம்பருத்தி வெற்றிகரமாக 1000 எபிசோட்களைக் கடந்துள்ளது.

  • Share this:
    அக்டோபர் 16, 2017 அன்று முதல் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான, செம்பருத்தி வெற்றிகரமாக 1000 எபிசோட்களைக் கடந்துள்ளது.

    இதனை முன்னிட்டு இந்த சீரியலின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். சீரியலின் முன்னணி நடிகை பார்வதியாக நடிக்கும் ஷபானா, தனது சமூக ஊடகத்தில் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். 1000 எபிசோடைக் கடந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக செம்பருத்தி சீரியல் குழுவினர், இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடியதோடு, கேக்கும் வெட்டினார்கள்.

    இந்த லைவ் அமர்வில், நடிகர்கள் செம்பருத்தி சீரியலின் ஒரு பகுதியாக இருப்பது குறித்தும், அது 1000 எபிசோடைக் கடந்திருப்பதன் உணர்வையும் பகிர்ந்து கொண்டனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஷபானா, ”எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன், தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இந்த பாத்திரம் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது! இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி! பார்வையாளர்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் தொடர்ந்த அவர், ”அனைத்து ரசிகர் பக்கங்களுக்கும் நன்றி. 1000 அத்தியாயங்கள் அவ்வளவு எளிதானது அல்ல, இப்போது இதை ஒரு மந்திரம் போல் உணர்கிறோம். ‘பார்வதி’ கதாபாத்திரத்திற்காக எனக்குக் கிடைத்த அன்பிற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து ரசிகர்களும் ‘செம்பருத்தி’ குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: