Zee Tamil: ராசாத்திக்கு உதவிய பார்வதி - செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சாதனை சங்கமம்!

பார்வதி - ராசாத்தி

அகிலாவிடம் கூட்டிசெல்வதாகக் கூறி, தான் அகிலாவின் மருமகள் எனக் கூறுகிறாள் பார்வதி. இதைக் கேட்ட ராசாத்தி ஆச்சர்யம் அடைகிறாள்.

  • Share this:
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய சீரியல்களின் சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.

    அகிலா மற்றும் அவரது கணவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கிறார் ராசாத்தி. பின்னர் டிரஸ்ட் மீட்டிங்கில் கலந்துக் கொள்ள செல்கிறாள், ஆனால் தாமதமாகி விட்டது என ரிஜிஸ்டர் செய்ய முடியாது என திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அதனால் கோவிலுக்கு செல்கிறாள் ராசாத்தி.

    ராசாத்தியை கோவிலில் சந்திக்கும் பார்வதி, அவளிடம் என்ன பிரச்சனை எனக் கேட்கிறாள். அதற்கு அகிலா மேடம் மனது வைத்தால் தான் தங்களால் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியும் என கூற, அதற்கு பார்வதி தான் அகிலாவிடம் கூட்டிசெல்வதாகக் கூறி, தான் அகிலாவின் மருமகள் எனக் கூறுகிறாள். இதைக் கேட்ட ராசாத்தி ஆச்சர்யம் அடைகிறாள்.

    பின்னர் ராசாத்தியையும் இனியனையும் வீட்டுக்கு கூட்டிச் சென்று அகிலாவிடம் அறிமுகப்படுத்துகிறாள் பார்வதி. அவர்கள் ஊருக்கு தண்ணீர் பிரச்சனை விஷயமாக வந்திருக்கிறார்கள் எனவும் டிரஸ்ட் மீட்டிங்கில் அவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கூறுகிறாள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சரியான நேரத்திற்கு வர வேண்டும் என உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருப்பார்கள், அப்படி இருந்தும் ஏன் தாமதமாக வந்தீர்கள். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் உங்களுக்கு என்னால் உதவ முடியாது என அகிலா கூற, ராசாத்திக்காக பார்வதி மீண்டும் மீண்டும் கேட்கிறாள். பின்னர் ஒருவழியாக அகிலா ஒத்துக் கொள்கிறார்.

    இதையடுத்து மீட்டிங் தொடங்கியதும், அகிலா மேடைக்கு வந்து அமர்கிறார். கிராமங்களின் வளர்ச்சிக்காக டிரஸ்ட் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருவது பற்றி பேசுகிறார் அகிலா. அதன்பிறகு ஒவ்வொருவராக வர சொல்லி காசோலை வழங்குகிறார்கள். அப்போது ராசாத்தியின் பெயர் அழைக்கப்படுகிறது. அந்த நேரம் டாக்டர் வந்து, இவர்கள் தான் உங்களை காப்பாற்றியது என அகிலாவிடம் சொல்கிறார். இதைக்கேட்ட அகிலா நெகிழ்ச்சியடைகிறார்.

    ராசாத்தி காசோலையைப் பெற்றுக்கொண்டு கீழே இறங்க முற்பட்டபோது அகிலா அவளை தடுத்து நிறுத்தி, ராசாத்தி தங்கள் உயிரைக் காப்பாற்றியது குறித்து பேசுகிறாள். அதோடு ராசாத்தி அவளது கிராமத்திற்கு வைத்திருக்கும் திட்டம் மிகப்பெரியது. அதற்கு இன்னும் எட்டரை கோடி ரூபாய் தேவை. நம்முடைய டிரஸ்ட் மூலமாக அதை கொடுக்க முடியாது. அதனால் நான் என்னுடைய சொந்த பணத்தில் மீதமிருக்கும் எட்டரை கோடி ரூபாயை தரப்போகிறேன் என அறிவிக்கிறார்.

    இதைக்கேட்ட ராசாத்தி இன்ப அதிர்ச்சியடைகிறாள். அகிலாவுக்கு நன்றி சொல்லி விட்டு, செல்பி எடுத்துக் கொள்ள கேட்கிறார்கள். அப்போது இன்று இரவு எங்கள் வீட்டுக்கு டின்னர் சாப்பிட வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் அகிலா. இதையடுத்து அகிலா வீட்டுக்கு செல்கிறார்கள் ராசாத்தியும் இனியனும். அவர்களைப் பார்த்த வனஜா, என்ன பட்டிக்காடு மாதிரி இருக்கீங்க என்கிறார். அந்த நேரம் அங்கு வந்த அகிலா, வாங்க வாங்க என அழைத்துக் கொண்டு போகிறார்.

    அடுத்து என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: