Sembaruthi Serial: செம்பருத்தி சீரியலில் புதிதாக இணைந்த நடிகை

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியலில் உமா கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை இணைந்துள்ளார்.

  • Share this:
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. திரைப்பட நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் அவரது மூத்த மகனாகவும் இத்தொடரின் நாயகனாகவும் நடித்து வந்த கார்த்திக் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக அக்னி அந்தக் கேரக்டரில் தற்போது நடித்து வருகிறார்.

    அதேபோல் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ஜனனி அசோக் குமாரும் நீக்கப்படவே ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் ரசிகர்களை மகிழ்விக்க கதையில் பல்வேறு திருப்பங்களை கொண்டுவருகிறது சீரியல் குழுவினர். இந்நிலையில் இத்தொடரில் தற்போது நடிகை துர்கா இத்தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

    அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தான் உமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தனக்கு ஆதரவளிக்குமாறும் தனது இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்துள்ளார் நடிகை துர்கா. மேலும் நடிகை ப்ரியா ராமனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Durgaa (@actressdurgaa_official)






    கடந்த 2017-ம் ஆண்டு முதல் செம்பருத்தி தொடர் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Sheik Hanifah
    First published: