செம்பருத்தி சீரியலில் இணைந்த பிரபல ஹீரோ நடிகர்

செம்பருத்தி சீரியல்

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் இணைந்துள்ளார்.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. திரைப்பட நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் அவரது மூத்த மகனாகவும் இத்தொடரின் நாயகனாகவும் நடித்து வந்த கார்த்திக் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக அக்னி அந்தக் கேரக்டரில் தற்போது நடித்து வருகிறார்.

அதேபோல் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ஜனனி அசோக் குமாரும் நீக்கப்படவே ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் ரசிகர்களை மகிழ்விக்க கதையில் பல்வேறு திருப்பங்களை கொண்டுவருகிறது சீரியல் குழுவினர். இந்நிலையில் இத்தொடரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகை துர்கா புதிதாக என்ட்ரி கொடுத்தார்.

அவர் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக அவர் சன் டிவியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ஹீரோவின் அப்பாவாக நடித்து வருகிறார். அதேபோல் ‘பூவே பூச்சூடவா’ தொடரிலும் நடித்திருந்தார்.

1982-ம் ஆண்டு வெளியான ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் உதவி இயக்குநராகவும், சிறிய கேரக்டரிலும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)


அதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் கன்னிராசி, காக்கி சட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைத்தும் கொடுத்திருக்கிறார்.

 
Published by:Sheik Hanifah
First published: