ஜீ தமிழில் ரவுடி பேபி சத்யாவாக கலக்கும் சின்னத்திரை நடிகை ஆயிஷாவின் வலிகள் நிறைந்த முன் வாழ்க்கை பற்றி பலருக்கும் தெரியாது.
சின்னத்திரை நடிகைகளை ரசிக்கவே இப்போது தனி கூட்டம் உள்ளது.சீரியலில் அவர்களை பிடித்து விட்டால் போதும் உடனே அவர்களை இன்ஸ்டாவில் பின் தொடர்வது, அவர்களின் ட்ரெஸிங் தொடங்கி மேக்கப் வரை விடாமல் ஃபோலோ செய்யும் அளவுக்கு சின்னத்திரை நடிகர் நடிகைகள் ரசிகர்களை கட்டி போட்டுள்ளனர். அந்த வகையில் தனக்கென தனி ஃபேன்ஸ் பேட்ச், ஃபாலோவர்ஸ் என மிரள வைக்கும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் சின்னத்திரை நடிகை ஆயிஷா பலராலும் கவனிக்கப்படுபவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், இன்று அடைந்திருக்கும் புகழ் கண்டிபாக அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
கேரளாவை சேர்ந்த ஆயிஷா, சின்னத்திரையில் நுழைந்த பிறகு சந்திக்காத பிரச்சனைகள், விமர்சனங்களே இல்லை எனலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். முதல் சீரியலிலே சர்ச்சை வெடித்தது. சீரியல் டைரக்டருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பு பல மாதங்களாக மன உளைச்சலில் இருந்தார். காரணம், அந்த சீரியலுக்கு பிறகு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் பல இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டார். அப்போது தான் சன் டிவி சீரியல் மாயா ஆயிஷாவுக்கு கைக்கொடுத்தது. அதில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.அந்த தொடர் முடிவடையும் போதே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா தொடரில் ரவுடி பேபியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் டாம்பாய் ரோலில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் ஆயிஷா.
இந்த சீரியல் மூலம் இவருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகப் பெரியது. சோஷியல் மீடியாவில் இவருக்கென்று ஒரு கூட்டமே உள்ளது. வழக்கமான சீரியல் தொடர்களில் வரும் கதாநாயகிகளை போல் இல்லாமல் ஆண்கள் அணியும் உடையில் படு லோக்கல் பெண்ணாக நடித்தது தான்
ஆயிஷாவின் ஸ்பெஷல். ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதாக ஆயிஷாவுக்கு கிடைக்கவில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர்
பல கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். கூடவே ஏகப்பட்ட சர்ச்சைகள் வேற.

ஆயிஷா
இப்போது கூட
சத்யா தொடரில் நடிக்கும் விஷ்ணுவிற்கும் ஆயிஷாவுக்கும் காதல், இயக்குநருடன் பிரச்சனை என பல கிசுகிசுக்கள் இவரை பற்றி உலா வந்து கொண்டு தான் உள்ளன. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒருமுறை டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆயிஷா பெண்களின் தன்னம்பிக்கை குறித்து பேசி இருந்தார். அதுமட்டுமில்லை நடிப்பு வரல, வேஸ்ட் , ஒல்லியா இருக்க அப்படி இப்படின்னு ஏகப்பட்ட உருவ கேலிகளையும் ஆயிஷா தனது பயணத்தில் சந்தித்திருக்கிறாராம். கொஞ்சம் கூட நடிக்கவே வரலை என்று இயக்குநரிடம் திட்டு வாங்கி, நடுரோட்டில் நின்று அழத காலங்களும் உண்டாம். ஆனால் இன்று இந்த வெற்றி அனைத்து வலிகளையும் மறக்க செய்து விட்டதாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.