Home /News /entertainment /

ஜீ தமிழில் 100 எபிசோட்களை கடந்த புத்தம் புது சீரியல்...  கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

ஜீ தமிழில் 100 எபிசோட்களை கடந்த புத்தம் புது சீரியல்...  கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

Rajini: ரஜினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி சீரியல் வெற்றிகரமாக 100 எபிசோட்களை கடந்துள்ளதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

Rajini: ரஜினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி சீரியல் வெற்றிகரமாக 100 எபிசோட்களை கடந்துள்ளதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

Rajini: ரஜினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி சீரியல் வெற்றிகரமாக 100 எபிசோட்களை கடந்துள்ளதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

தொலைக்காட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. விஜய் டி.வி., சன்.டி.வி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சிகள் இடையே விதவிதமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற டி.ஆர்.பி போட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விஜய் டி.வியைப் பொறுத்தவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாக்கியலட்சுமி’ , ‘ராஜா ராணி சீசன் 2’, ‘தமிழும் சரஸ்வதியும்’ உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டி.வி.யில் ‘பூவே உனக்காக’, ‘மகராசி’, ‘திருமகள்’, ‘சித்தி 2’, ‘பாண்டவர் இல்லம்’, ‘சந்திரலேகா’, ‘அருவி’, ‘தாலாட்டு’, ‘அபியும் நானும்’, ‘சுந்தரி’, ‘கயல்’, ‘வானத்தை போல‘, ‘கண்ணான கண்ணே‘, ‘ரோஜா’, ‘எதிர்நீச்சல்’, ‘அன்பே வா’ உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அம்மன் 3’, ‘இதயத்தை திருடாதே சீசன் 2’, ‘அபி டெய்லர்’, ‘வள்ளித்திருமணம்’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘உயிரே’ ஆகிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் கிட்டதட்ட கதைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் நடிகர்கள், காட்சி அமைப்பு போன்ற காரணங்களுக்காக ஒவ்வொரு சீரியலுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘இரட்டை ரோஜா', ‘திருமதி ஹிட்லர்’, ‘சத்யா 2', ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘செம்பருத்தி’, ‘கோகுலத்தில் சீதை’ என டஜன் கணக்கில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அத்துடன் சமீபத்தில் அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், பேரன்பு ஆகிய சீரியல்களின் ஒளிபரப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கியது. இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக ஜீ தமிழ் தொலைக்காட்சி ‘ரஜினி’ என்ற புத்தம் புது சீரியலை ஆரம்பித்தது.

இந்த சீரியல் டிசம்பர் 7ம் தேதி முதல் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே சத்யா என்ற வித்தியாசமான பெயரில் ஜீ தமிழ் ஒளிபரப்பிய சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட தலைப்பாக ‘ரஜினி’ என சீரியலுக்கு பெயர் வைத்தது ரசிகர்கள் மனதை மிகவும் கவர்ந்தது.

மிகப்பெரிய குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமையையும் தாங்கும் தைரியமான பெண் தான் ரஜினி, வீட்டில் அனைத்து செலவும் அவள் தான் பார்த்தாக வேண்டும். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் சாதித்து காட்ட நினைக்கும் ரஜினியின் வாழ்வில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களே நாடகத்தின் கதையாக அமைந்துள்ளது. இதில் திருமணம் சீரியல் புகழ் ஸ்ரேயா ரஜினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் புரோமோ வெளியான போது அப்படியே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் காப்பி என நெட்டிசன்கள் ட்ரால் செய்து வந்தனர். ஆனால் பல்வேறு விமர்சனங்களையும் கடந்து ரஜினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி சீரியல் வெற்றிகரமாக 100 எபிசோட்களை கடந்துள்ளதை  சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 
Published by:Elakiya J
First published:

Tags: Zee tamil

அடுத்த செய்தி