• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 200 எபிசோட்களை கடந்த புதுப்புது அர்த்தங்கள்.. நன்றி தெரிவித்த நடிகை தேவயானி!

200 எபிசோட்களை கடந்த புதுப்புது அர்த்தங்கள்.. நன்றி தெரிவித்த நடிகை தேவயானி!

காட்சி படம்

காட்சி படம்

Zee Tamil Serial : 200 எபிசோட்களை புதுப்புது அர்த்தங்கள் சீரியல் கடந்துள்ளது.

  • Share this:
பிரபல தமிழ் சேனல்கள் அனைத்திலும் தவறாமல் இடம்பெறும் ஒன்றாக இருக்கின்றன சீரியல்கள். விதவிதமான கதையம்சங்களுடன் வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான சீரியல்களை ஒளிபரப்பை மக்களை கவர்ந்து வருகின்றன முன்னணி டிவி சேனல்கள். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களின் பெயர்களை டைட்டிலாக கொண்ட சீரியல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து வருகின்றன. இதனிடையே சின்னத்திரை ரசிகர்களின் ஆதரவை பெற்ற பிரபல சேனலான ஜீ தமிழ் சேனலில் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது "புதுப்புது அர்த்தங்கள்" சீரியல்.

மார்ச் மாதம் டெலிகாஸ்ட் ஆக துவங்கிய இந்த பிரபல சீரியல் சமீபத்தில் 200 எபிசோடுகள் என்ற மைல்கல்லை வெற்றிகரமாக கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியல் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையேயான இதயப்பூர்வமான உறவை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பிரபல நடிகை தேவயானி, லட்சுமி என்ற கேரக்டர் மூலம் மாமியார் ரோலில் சிறப்பாக நடித்து வருகிறார்.

"சினேகா அபார்ட்மெண்ட்" என்ற குடியிருப்பில் வசிக்கும் தேவயானி தனி ஒரு ஆளாக இருந்து மகனையும், மாமனாரையும் கவனித்து கொள்வதோடு, தனக்கு வரும் எல்லா சிக்கல்களையும் அமைதி மற்றும் பொறுமையுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் தேவயானியின் மகனாக சந்தோஷ் என்ற கேரக்டரில் நடிகர் நியாஸ், இவரது மனைவி பவித்ராவாக வி.ஜே. பார்வதி ஆகியோர் நடித்து வருகின்றனர். சந்தோஷின் தாத்தா திருவேங்கடம் கேரக்டரில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி நடித்து வந்த நிலையில், தற்போது லியோனிக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்து வருகிறார்.

also read : அம்மாடி உன் அழகு செம தூளு! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

மகன் சந்தோஷ் மற்றும் திருவேங்கடம் கேரக்டர்கள் எப்போது பார்த்தாலும் லட்சுமிக்கு எதிராகவே பேசி வரும் நிலையில், மாமியாருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறார் பார்வதி.ஹரி கிருஷ்ணண் என்ற கேரக்டரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அபிஷேக், சந்தர்ப்பவசத்தால் தேவயானியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதனால் வீட்டில் பிரச்னை பூதாகரமாக வெடிக்கிறது. எனவே தனக்கு தேவையான மரியாதையை பெற போராடுகிறார் தேவயானி. இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் சமீபத்தில் 200-வது எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது.



இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகை தேவயானி தனது இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். Celebrating 200th Episode என்ற வாசகம் அடங்கிய சீரியலின் போஸ்டரை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கும் நடிகை தேவயானி "நன்றி மக்களே" என்று ரசிகர்களுக்கு கூறி கொண்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: