தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் போட்டி போட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சீரியல்கள் மக்களை அதிகம் கவர்ந்துள்ளதால் பொழுதுபோக்கை மையமாக கொண்ட முன்னணி சேனல்கள் வாரநாட்கள் முழுவதும் சீரியல்கள் மீது தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
சன் டிவி, ஸ்டார் விஜய் டிவி உள்ளிட்ட முன்னணி சேனல்களுக்கு அடுத்து தமிழ் டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து கொண்டிருக்கிறது ஜீ தமிழ். வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான சீரியல்களை ஒளிபரப்பி மக்களை கவருவதில் ஆர்வம் காட்டி வரும் முன்னணி தமிழ் டிவி சேனல்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ். ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என பல ஜீ தமிழில் ஒளிபரப்பபட்டாலும், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிறைவடைந்த யாரடி நீ மோகினி சீரியலுக்கு பிறகு, மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை களமிறக்கி உள்ளது. புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தி, வித்யா நம்பர் 1, இரட்டை ரோஜா, பேரன்பு, தெய்வம் தந்த பூவே, அன்பே சிவம், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல சீரியல்கள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சேனலில் பல ஹிட் சீரியல்களுக்கு மத்தியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் ரசிகர்களை கவர்ந்த முக்கிய மற்றும் பிரபல சீரியலாக இருக்கிறது கோகுலத்தில் சீதை.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் டான்ஸ் மாஸ்டர் நந்தகோபால், அர்ஜுன் என்ற கேரக்டரில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஆஷா கவுடா, வசுந்தரா (வசு) என்றார் கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர்களை தவிர இந்த சீரியலில் நடிகை நளினி, காந்திமதி என்ற பாட்டி கேரக்டரில், காயத்திரி,ஷங்கரேஷ்குமார், லஸ்யா நாகராஜ், கௌசல்யா செந்தாமரை, விஜய் கிருஷ்ணராஜ், வீணா வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
Also Read : 'இந்தி சினிமாவில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' - நடிகர் மகேஷ் பாபு
ரசிகர்களின் பேராதரவு பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலை விரைவில் முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல சேனல்களில் புதிது புதிதாக சீரியல்கள் துவக்கப்பட்டு உள்ளதால் அவற்றுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பல புதிய சீரியல்களை சில மாதங்களாக களமிறக்கி வருகிறது ஜீ தமிழ்.
Also Read : பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துடன் மோதப் போகும் தளபதி 66...
இந்நிலையில் வேறு சில புதிய சீரியல்களை அடுத்தடுத்து டெலிகாஸ்ட் செய்ய திட்டமிட்டு உள்ளதால், அதற்கேற்ப கோகுலத்தில் சீதை சீரியலை இன்னும் சில நாட்களில் சேனல் நிர்வாகம் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் சீரியல் இதுவரை அருமையாக போய் கொண்டிருக்கிறது. இதை முடிக்காமல் கதையை தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.