Reshma-Madhan: ’பூவே பூச்சூடவா’ ரேஷ்மா சொன்ன குட் நியூஸ்!

மதன் - ரேஷ்மா

இந்த 2021-ம் ஆண்டில் ரேஷ்மாவும், மதனும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’பூவே பூச்சூடவா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சக்தியாக நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த சீரியலில் நடித்து வரும் மதனும், ரேஷ்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, இருவரும் தங்கள் காதலை ரசிகர்களுக்கு அறிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்டனர். அதோடு இன்ஸ்டாகிராமில் மாற்றி மாற்றி தங்கள் படங்களை பகிர்ந்தும் வருகிறார்கள். இந்த 2021-ம் ஆண்டில் ரேஷ்மாவும், மதனும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’பூவே பூச்சூடவா’ சீரியல் குறித்து தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ”பூவே பூச்சூடவா சீரியல் 1000 எபிசோட்களை கடந்துள்ளது. இது எங்களுடைய வெற்றி அல்ல. இதற்கு காரணம் நீங்கள் தான். இந்த சீரியலுக்கு இத்தனை பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இன்னும் இரண்டாயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் எபிசோடுகள் வரை சென்றாலும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை" என அந்த வீடியோவில் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: