Home /News /entertainment /

வானதி எனக்கு சரியான மனைவி இல்லை… ‘பேரன்பு’ சீரியலில் ட்விஸ்ட்!

வானதி எனக்கு சரியான மனைவி இல்லை… ‘பேரன்பு’ சீரியலில் ட்விஸ்ட்!

பேரன்பு

பேரன்பு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு.

  • News18
  • Last Updated :
    ‘பேரன்பு’ சீரியலில் வானதியை தனக்கு பிடிக்கவில்லை, நாங்கள் இன்னும் வாழவேத் தொடங்கவில்லை என உண்மையை உடைக்கிறான் கார்த்திக்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு. வானதியை அமுதா கடத்தி வைத்து நாடகமாடி ராஜராஜேஷ்வரியை வரவழைத்து அவரை கொல்ல திட்டமிட அத்தையைக் காப்பாற்ற வானதி கத்தி குத்து வாங்கிக் கொள்கிறாள்.

    பிறகு ராஜராஜேஷ்வரி, வானதி குணமானதும் வீட்டுக்கு அழைத்து செல்ல இதுவரை அம்மாவுக்காக நடித்து வந்த கார்த்திக் ‘’எனக்கு வானதியை பிடிக்கவில்லை, உங்களுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்’’ என உண்மையை உடைக்க ராஜராஜேஷ்வரி அதிர்ச்சியாகி மயங்கி விழுகிறார். இதனால் ராஜராஜேஷ்வரி நிலை என்னவாகும்? கார்த்திக் எடுக்கப் போகும் அடுத்த முடிவு என்ன? வானதியின் நிலைமை என்னாகும்?

    Also read... இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

    இன்னொரு பக்கம் தனது தம்பிக்கு ஆர்த்தியை விவாகரத்து செய்து விட்டு மானஸாவை திருமணம் செய்து வைக்க கார்த்திக் முயற்சி செய்ய இதை வானதி தடுத்து நிறுத்துவாளா, இல்லையா? ராஜராஜேஸஷ்வரி என்ன செய்யப் போகிறாள் என பல திருப்பங்களுடன் வரும் நாட்களில் பேரன்பு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, TV Serial

    அடுத்த செய்தி