Home /News /entertainment /

விவகாரத்து இல்லை.. உறுதி செய்த செம்பருத்தி ஷபானா! ரசிகர்கள் செம்ம ஹாப்பி

விவகாரத்து இல்லை.. உறுதி செய்த செம்பருத்தி ஷபானா! ரசிகர்கள் செம்ம ஹாப்பி

செம்பருத்தி ஷபானா

செம்பருத்தி ஷபானா

ஷபானா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டார். அதன் மூலம் இந்த வதந்திகள் சற்று ஓய்ந்தன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    ஜீதமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் 'செம்பருத்தி'. இந்த சீரியல் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார்.

    இவருடைய காதல் விவகாரம் குறித்து ஏற்கனவே, பல தகவல்கள் கசிந்த , நிலையில் அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்கும் நடிகர் ஆர்யனை காதலிப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் திடீரென கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் பரவி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் வீட்டில் சரத்குமார்... பணத்துடன் வெளியேறப்போவது யார்?

    நடிகை ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு அரை மனதோடு ஆர்யன் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டாலும் , ஷபானா வீட்டில் தொடர்ந்து திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோரை மீறி ஷபானா ஆர்யனை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் நண்பர்கள் உதவியோடு மிகவும் எளிமையாகவே நடந்தது. தற்போது ஆர்யன் குடும்பத்தில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக சில வதந்திகள் பரவி வருகின்றன. எனவே இருவரும் திருமணம் ஆன ஒரே மாதத்தில் விவாகரத்து  முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவ துவங்கியது.

    அதே நேரத்தில், ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்றும் பதிவு செய்திருந்தது ரசிகர்களை மேலும் குழப்பம் அடைய செய்திருந்தது. இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவரை இன்ஸ்டாவில் சுமார் ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். மேலும் இந்த வதந்தி குறித்து பல கேள்விகளை எழுப்பி வந்தனர். ஆனால் எதற்கும் பதிலளிக்காமல் இருந்தது இந்த காதல் ஜோடி.




    இதனிடையே ஷபானா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டார். அதன் மூலம் இந்த வதந்திகள் சற்று ஓய்ந்தன. இந்த நிலையில் மேலும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைக்கும் வகையில் தற்போது மேலும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

    இதையும் படிங்க.. ர்ஜ் கலிஃபா முன் புத்தாண்டை கொண்டாடிய நயன்-விக்கி.

    அந்த வீடியோவில், நடிகை ஷபானா தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த போது தனது கணவருடன் வீடியோ காலில் பேசும் காட்சிகளை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரியப்போவதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sembaruthi Serial, Zee tamil

    அடுத்த செய்தி