• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரிந்து வாழும் பெற்றோருக்கு ’அன்பு’ பாலமிடும் குழந்தைகள் - ஜீ தமிழில் ’அன்பே சிவம்’ புது சீரியல்!

பிரிந்து வாழும் பெற்றோருக்கு ’அன்பு’ பாலமிடும் குழந்தைகள் - ஜீ தமிழில் ’அன்பே சிவம்’ புது சீரியல்!

அன்பே சிவம் சீரியல்

அன்பே சிவம் சீரியல்

அன்பே சிவம் சீரியலில், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த ரக்‌ஷா ஹாலா அன்புச் செல்வி என்ற லீட் ரோலில் நடிக்கிறார்.

  • Share this:
    விவாகரத்து பெற்ற பெற்றோரை, குழந்தைகளின் அன்பு எப்படி சேர்த்து வைக்கிறது என்ற புதிய கதைக்களத்துடன் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் ஜீ தமிழில் அன்பே சிவம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகிறது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சி கொரோனா இயல்பு நிலைக்குப் பிறகு புத்தம் புதிய ரியாலிட்டி ஷோக்களை தொடர்ச்சியாக களமிறக்கி வருகிறது. உலகளவில் மெகா ஹிட்டான நிகழ்ச்சியான சர்வைவர் ஷோவை முதன்முதலாக தமிழில் ஒளிபரப்பி வருகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்க தமிழ் பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த ஷோ இதுவரை இல்லாத ரீச்சை மக்களிடம் கொடுத்துள்ள நிலையில், சீரியல்களையும் புதுசாக களமிறக்கி வருகிறது. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் ‘அன்பே சிவம்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    இந்த சீரியலில், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த ரக்ஷா ஹாலா அன்புச் செல்வி என்ற லீட் ரோலில் நடிக்கிறார். நல்ல சிவம் கதாப்பாத்திரத்தில் விக்ரம் ஸ்ரீநடிக்கிறார். சிவா மனசுல சக்தி மற்றும் காற்றின் மொழி ஆகிய சீரியல்களில் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்தக் கதையைப் பொறுத்த வரை, நல்ல சிவம் நேர்மையான வழக்கறிஞராக இருக்கிறார். அன்புச் செல்வி சிறந்த பேஷன் டிசைனராக இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும் இருவரும், ஒருகட்டத்தில் தங்களுக்கு இடையே எழும் முரண்பாடு காராணமாக விவாகரத்து பெற்றுக் கொள்கின்றனர்.

    அவர்களுக்கு ஓவியா மற்றும் இனியா என்ற இருக் குழந்தைகள் இருக்கின்றனர். இருவரில் ஓவியா அன்புச் செல்வியிடமும், இனியா நல்ல சிவத்திடமும் வளர்கின்றனர். அவர்களின் தாய் மற்றும் தந்தையை சந்திக்கும்போது, பெற்றோரிடம் மீண்டும் புரிதல் ஏற்பட்டு இணைகிறார்களா? என்பதே கதையாக இருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறித்து பேசிய நடிகை ரக்ஷா ஹாலா, அன்புச் செல்வி கதாப்பாத்திரம் மிகவும் சவாலான கேரக்டர் என தெரிவித்துள்ளார்.

    மேலும் "வெளியுலகுக்கு திடமான மற்றும் திறமையான பெண்ணாக தெரிந்தாலும், அன்புச் செல்வியின் இதயம் உண்மையில் நொறுங்கிப் போயிருக்கும். அதனை வெளியுலக்குக்கு ஒருபோதும் காட்டமாட்டாள். அம்மா, மனைவி, தொழிலதிபர், மகள் என அனைத்து நிலைகளையும் இந்த கதாப்பாத்திரம் கொண்டிருக்கிறது. இந்த சவாலான கதாப்பாத்திரத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்து வருகிறேன். ஒட்டுமொத்தமாக இந்த சீரியலில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

    விக்ரம் ஸ்ரீ பேசும்போது, "நல்ல சிவம் கதாப்பாத்திரம் பொறுப்புகளுக்கும், ஆசைகளுக்கும் இடையில் சிக்கித் தவிர்க்கும் ஒரு கேரக்டர். பார்வையாளர்கள் எளிதில் கனெக்டாகும் ஒரு கதாப்பாதிரமாக இருக்கும் என்பதால், நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். அன்பே சிவம் சீரியலில் கதாநாயகனாக நடிப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரங்களாக அன்சிகா, ஹதீத் மற்றும் ஸ்ரீகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: