• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நீச்சல் குளத்தில் ஜீ தமிழ் சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படம்!

நீச்சல் குளத்தில் ஜீ தமிழ் சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படம்!

சுபிக்‌ஷா

சுபிக்‌ஷா

தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    நீ தானே எந்தன் பொன்வசந்தம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்.

    கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோதே ஜோதேயலி’ என்ற தொடரின் ரீமேக் தான் ’நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியல். இந்த தொடரில் தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன் என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

    நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாக்கூட்டம், இனிது இனிது காதல் இனிது, அடடா என்ன அழகு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் முதல் முறையாக சின்னத்திரையில் இந்த சீரியலில் நடிக்கின்றார். இந்த தொடரின் கதை 20 வயதான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனு என்ற பெண்ணும் 40 வயதான பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபருக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்பது தான்.

    இது ஒரு வித்தியாசாமான காதல் கதை கொண்ட தொடர் ஆகும். சூர்யா-அனு காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதால் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்து 400 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நிவாஸினி திவ்யா, சோனியா, சாய்ராம் கார்த்திக் சசிதரன், சுபிக்ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்கள்.

    தற்போது பெரும்பாலான சீரியல் நடிகர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். இதனால் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கே தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது. அந்த வகையில் இந்த சீரியலை முக்கிய வேடத்தில் நடித்து வரும் சுபிக்ஷா, எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் மாடர்ன் உடையில் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்தநிலையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நடிகைகள் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை என வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஏராளமானோர் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் செய்தும் வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: