சீரியல் பிரபலங்களை வைத்து ஒரு பிக்பாஸ் வெர்ஷனா? - பிரபல சேனல் வெளியிட்ட வீடியோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் 26 பிரபலங்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரியல் பிரபலங்களை வைத்து ஒரு பிக்பாஸ் வெர்ஷனா? - பிரபல சேனல் வெளியிட்ட வீடியோ
டிவி நிகழ்ச்சி
  • Share this:
26 பிரபலங்களை 3 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவைத்து நிகழ்ச்சி நடத்தியிருப்பதாக பிரபல தனியார் டிவி ப்ரமோ வீடியோ வெளியிட்டுள்ளது.

தமிழில் 3 சீசன்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்க வைக்கப்படுவர்.

வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கிடையே தினமும் சில டாஸ்க்குகளைக் கொடுப்பார் பிக்பாஸ். அதில் வெற்றி பெற்று பார்வையாளர்களின் வாக்குகளைப் பெற்று 100 நாட்கள் எந்த போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனியே ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் ஜீ தமிழ் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போன்றே ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் 26 பிரபலங்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் 3 நாட்கள் நடிக்காமல் இருக்க வேண்டும் என்பது தானாம். இதில் பெரும்பாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.



இந்த ப்ரமோ வீடியோவைப் பார்த்த பலரும் இது என்ன பிக்பாஸ் நியூ வெர்ஷனா என்றும் அந்த நிகழ்ச்சியை காப்பியடித்து விட்டீர்களா என்றும் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். ஆனால் இந்நிக்ழ்ச்சி ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading