ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜீ தமிழின் கேம் ஷோவில் நடிகர் அர்ஜூன்.. ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்கள்!

ஜீ தமிழின் கேம் ஷோவில் நடிகர் அர்ஜூன்.. ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்கள்!

 ஜீ தமிழின் சர்வைவர்  ஷோ

ஜீ தமிழின் சர்வைவர் ஷோ

பயத்தை மீறி உயிர்வாழ அத்தீவில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் பார்வையாளர்கள் பார்ப்பார்கள்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தமிழ் சின்னத்திரை ரசிகர்களை தனது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் கவர்ந்திழுப்பதில் ஜீ தமிழ் தனித்துவமாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் விஜய் டிவி-யின் பிக்பாஸ் போன்று வேறெந்த ஷோவும் மெகாஹிட் ஆனதில்லை. இந்த சாதனையை உடைக்கும் வகையில் உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற கருத்தின் அடிப்படையில் விரைவில் ஜீ தமிழின் சர்வைவர் (Survivor) ஷோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ தமிழ் சேனலின் மிக பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவாக குறிப்பிடப்படும் "சர்வைவர்"-ஐ வெள்ளித்திரையில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க போகிறார். பிக்பாஸ் ஷோவை போல ஒரே வீட்டில் இல்லாமல், காடுகள் நிறைந்த அழகிய தீவில் நடைபெற இருக்கிறது இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோ. இதிலும் பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இயற்கையின் பல்வேறு சக்திகளுக்கு எதிராக, தங்கள் வலிமையை பயன்படுத்தி உணவு, நீர் போன்ற அத்தியாவசிய மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அவர்கள் போராடுவதே இந்த ஷோவின் பிரதானம் ஆகும்.

தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க்குகளையும் போட்டியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். பெயரிலேயே விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களா மத்தியில் ஏற்ப்படுத்தி உள்ள Survivor, அனேகமாக விஜய் டிவி-யில் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாக உள்ள தருணத்தில் (செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் துவக்கம்) தான் ஒளிபரப்பாகும் என்று சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்க தீவு ஒன்றில் நடைபெற போகும் சாகச அடிப்படையிலான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் ஷோவை, 40 ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளித்திரையில் அதிரடி நாயகனாக ஜொலித்து வரும் அர்ஜுன் தொகுத்து வழங்க போவது ஜீ தமிழின் டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

also read ..சீரியலில் அம்மா பையன்.. நிஜத்தில்? பாக்கியலட்சுமி எழில் பற்றி பலருக்கும் தெரியாதவை!

இதன் மூலம் ஆக்ஷன் கிங் டெலி பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார். இது பற்றி உற்சாகம் தெரிவித்துள்ள அர்ஜுன், " சர்வைவர் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவின் ஒரு பகுதியாக நான் இருப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகளாவிய புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கப் போவதை நினைத்தால் உற்சாகமாக இருக்கிறது. சுமார் 3 மாத காலம் ஒளிபரப்பாக உள்ள இந்த சர்வைவரில், போட்டியாளர்கள் தங்கள் அச்சங்களை எதிர்கொள்வதையும், பயத்தை மீறி உயிர்வாழ அத்தீவில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் பார்வையாளர்கள் பார்ப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போட்டியாளர்களின் தீவிரம், வலிமை மற்றும் மனஉறுதி ஆகியவற்றை வெளிக்காட்டும் ஒரு கேமாக இருக்கும்" என்று கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட அதிரடியான சர்வைவர் ஷோவை தொகுப்பாளராக இருந்து மேலும் விறுவிறுப்பாக்குவார் ஆக்ஷன் கிங் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, 20 போட்டியாளர்கள் சர்வைவர் ஷோவில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இந்த ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்களாக நடிகர் விக்ராந்த், நந்தா துரைராஜ், வனிதா விஜய்குமார், இந்திராஜா சங்கர், விஜயலட்சுமி, ஸ்ரீ ரெட்டி, வி.ஜே. பார்வதி, ஷாலு ஷம்மு ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

First published:

Tags: Actor Arjun