Home /News /entertainment /

விரைவில் முடிவுக்கு வர உள்ள ஜீ தமிழின் பிரபல சீரியல் - ரசிகர்கள் அப்செட்.!

விரைவில் முடிவுக்கு வர உள்ள ஜீ தமிழின் பிரபல சீரியல் - ரசிகர்கள் அப்செட்.!

endrendrum punnagai

endrendrum punnagai

Endrendrum Punnagai Serial | 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை சீரியல் நடிகையான நீலிமா ராணியின் இசை பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியல் மதியத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக இருந்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
தொலைக்காட்சிகளில் என்ன தான் சினிமா, பாடல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என விதவிதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், சீரியலுக்கான மவுசு குறைவதில்லை. இதனால் தான் சன் டிவி, விஜய் டி.வி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகியவை போட்டி, போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. டிஆர்பி-யில் டாப் ரேட்டிங் வர வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக சீரியல்களை ஒளிபரப்புவதால் சில சமயங்களில் கதைகளில் ‘காப்பி பெஸ்ட்’ பஞ்சாயத்தும் வருவது உண்டு.

‘இது அது இல்ல’ என ரசிகர்களே கன்ஃபியூஸ் ஆகும் அளவுக்கு ஒரே மாதிரியான கதை அம்சத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் சற்றே வித்தியாசமானது. வழக்கமாக ஹீரோ என்றாலே அம்மா அல்லது அப்பா கன்ட்ரோலில் தான் இருப்பார்கள், ஆனால் இந்த சீரியலில் ஹீரோ முழுக்க முழுக்க பாட்டியின் கன்ட்ரோலில் தான் இருப்பார்.

கதையின் படி நாயகன் ஆகாஷ் பாட்டி ஆண்டாள் மூலம் வளர்க்கப்படுகிறார். குடும்பத்தை வழிநடத்தும் வீட்டிலேயே மூத்தவரான ஆண்டாள் தனது பேரன் ஆகாஷுக்கு ஆர்ஜே தென்றலை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆகாஷ் பாட்டியின் சொல் கேட்டு நடப்பவர், முற்றிலும் சுயமாக எந்த முடிவும் எடுக்காதவர் என்பதை தென்றல் தெரிந்து கொள்கிறார். இதனிடையே தென்றால் தான் விரும்பும் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஆகாஷுக்கும் தென்றலின் முதல் தங்கையான நிலாவிற்கு திருமணம் நடக்கிறது.

தனது பேரனை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆண்டாள் தென்றலை பழிவாங்க நினைப்பது தான் கதைக்களம். இதில் ஆர்ஜே தென்றலாக நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் நடித்து வருகிறார். பிரபல சீரியல் நடிகையான இவர், இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மாயா’, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘சிவகாமி’ ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஆகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நிதின் ஐயர் என்பவரும் தீபக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரில் நடிகை கவிதா வில்லியாகவும், ஆகாஷ் பாட்டியாக நடிக்கிறார்.

Also Read : இப்படியெல்லாம் நடக்க ஆல்யா மானசா தான் காரணமா.? வருத்தத்தில் சீரியல் குழு!

2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை சீரியல் நடிகையான நீலிமா ராணியின் இசை பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியல் மதியத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக இருந்து வருகிறது. 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)


ஜீ தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலான இது விரைவில் கிளைமேக்ஸை நோக்கி நகர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரொம்ப நல்ல சீரியல் இதில் நடித்த அனைவரையும் நாங்கள் மிஸ் செய்வோம் என பீலிங்குடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: TV Serial, Zee tamil

அடுத்த செய்தி