Home /News /entertainment /

300-வது எபிசோடை எட்டிய ’சித்திரம் பேசுதடி’ சீரியல் - கேக் வெட்டி கொண்டாட்டம்

300-வது எபிசோடை எட்டிய ’சித்திரம் பேசுதடி’ சீரியல் - கேக் வெட்டி கொண்டாட்டம்

சித்திரம் பேசுதடி சீரியல்

சித்திரம் பேசுதடி சீரியல்

Zee Tamil Chithiram Pesuthadi Serial : கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி சீரியல், 300 வது எபிசோடை எட்டியுள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் டிவி சேனல்களில் பெரும்பாலும் டப்பிங் சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி கொண்டிருந்தன. மெல்ல மெல்லவே "ஒரிஜினல்" தமிழ் சீரியல்கள் தலைதூக்க தொடங்கின. அப்படியான காலகட்டத்தில், தமிழ் சீரியல்கள் என்றாலே அது ராஜ் டிவி, சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான்!

யாரு பெஸ்ட்? நீயா நானா? என்று போட்டிபோட்டுக் கொண்டு, வித்தியாசமான கதைகளங்களின் வழியாக ரசிகர்களை தன்வசம் ஈர்ப்பதில் மேற்குறிப்பிட்ட சேனல்கள் கில்லாடிகளாக திகழ்ந்தன. அந்த பட்டியலில் இருந்து ராஜ் டிவி மட்டும் சற்றே விலகி கொண்டாலும் கூட சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய இரண்டும் டாப் கியர் போட்டு போய்க்கொண்டே இருக்கின்றன. இந்த போட்டியில் லேட்டஸ்ட் தமிழ் டிவி சேனல்களும் பங்கெடுத்த வண்ணம் உள்ளன.

அதில் ஜீ தமிழ் சேனல் கவனிக்கத்தக்கது மற்றும் இந்த சேனலில் சில அட்டகாசமான சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அப்படியான ஜீ தமிழ் சேனலின் வெற்றிகரமான சீரியல்களில் 'சித்திரம் பேசுதடி' ஒன்றாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல், 300 வது எபிசோட்டை எட்டியுள்ளது. இதற்காக சித்திரம் பேசுதடி சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.



அது சார்ந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் வழியாக பகிரப்பட்டு வருகிறது. வெளியான புகைப்படத்தில் சீரியலில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் சீரியல் குழுவினர் ஒன்றாக கூடி, "சித்திரம் பேசுதடி 300 எபிசோட்" என்று எழுதப்பட்டு இருக்கும் கேக்கை வெட்டி, ஒருவருக்கொருவர் குழுவினருக்கு ஊட்டிவிட்டு கொண்டாடுவதை பார்க்க முடிகிறது.

also read : ராஜா ராணி 2 பிரபலமா இது? வைரலாகும் பழைய போட்டோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
 வெளியான புகைப்படத்தில் கதையின் நாயகியாக, தங்கமயிலு என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் தீபிகா ரங்கராஜு, குருமூர்த்தி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பாபூஸ் பாபுராஜூவும் உள்ளனர். வெற்றிகரமாக 300 வது எபிசோட்டை எட்டியுள்ள சித்திரம் பேசுதடி சீரியலில், சமீபத்தில் விஜய் டிவி பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.





 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)





அது வேறு யாரும் இல்லை, விஜே தீபிகா தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக / மனைவியாக ஒரு பெண் நடித்தார் அல்லவா? - அவர் தான் விஜே தீபிகா. தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வெளியேறிய விஜே தீபிகா, ஜீ தமிழ் சேனலின் சித்திரம் பேசுதடி சீரியலில் ஒரு புதிய கதாபாத்திரமாக நுழைந்து உள்ளார்.

also read : பிரபல டான்ஸ் மாஸ்டரின் குழந்தைகளுடன் அட்டகாசமாக நடனமாடிய விஜய்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒன்றுமே தெரியாத மிகவும் அப்பாவியான ஒரு கேரக்டரில் நடித்த விஜே தீபிகா, சித்திரம் பேசுதடி சீரியலில் மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளார்; இன்னும் சொல்லப்போனால் நகைக்கடைக்குள் புகுந்து அசால்ட் ஆக நகைகளை திருடும் ஒரு பெண்ணாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

சித்திரம் பேசுதடி சீரியலில் தீபிகா என்கிற தன் இயற்பெயரிலேயே அறிமுகமாகி உள்ள விஜே தீபிகாவின் கதாபாத்திரமானது எதிரும் புதிருமாய் இருக்கும் குருமூர்த்தி - மயிலுக்கு இடையே எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அது எம்மாதிரியான திருப்பங்களாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Zee tamil

அடுத்த செய்தி