தான் சீரியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரை தன்னிடம் கூறவில்லை என அன்பே சிவம் சீரியல் நடிகை ரக்ஷா ஹொல்லா தெரிவித்திருக்கிறார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் முதல் பாகத்தில் மாயனுக்கு ஜோடியாக தேவி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரக்ஷா ஹொல்லா. கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட ரக்ஷா, ஜனவரி 26, 1991-ல் பெங்களூரில் பிறந்தார். அவரது குடும்பம், பாரம்பரிய விவசாயக் குடும்பம். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ரக்ஷாவின் ஆசை. படிப்பை முடித்த பிறகு, தனது 22 வயதில் அவர் நடிக்கத் தொடங்கினார். இவரது உயரம் 175 செ.மீ, அதாவது கிட்டத்தட்ட 6 அடி. அதோடு நன்றாக நடனமும் ஆடுவார்.
ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த ரக்ஷா, பிறகு கன்னட சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’புட்டிண்டி பட்டு சேரா’ என்ற கன்னட சீரியல் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த சீரியலில்
பிரபல நடிகர்களான ஸ்ரீ திவ்யா, யாமினி பாஸ்கர், ராமாயணம் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தார்கள். அதன் பிறகு தமிழ் சீரியல்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். ‘வம்சம்’, ‘தமிழ் கடவுள் முருகன்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பை தொடங்கிய ‘அன்பே சிவம்’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அவரை சீரியலை விட்டு விலக்கியிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய ரக்ஷா, நான் அன்பே சிவம் சீரியலில் இருக்கிறேனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை, என்றார்.
இந்நிலையில் தற்போது இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், “நான் அன்பே சிவம் சீரியலில் இல்லை என்பதை தற்போது அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நானும் அதை
உறுதி செய்கிறேன். ஆனால் குழுவினர் இதுவரை என்னிடம் சொல்லவில்லை. இது தான் அவர்களின் வேலை முறை. இதற்காக நான் ஆச்சர்யப்படவில்லை. எனக்கு அன்பு மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த புராஜெக்ட்டில் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.