ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுதாவின் முகத்தில் ஆசிட் ஊற்ற முடிவு எடுக்கும் வடிவேலு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவின் முகத்தில் ஆசிட் ஊற்ற முடிவு எடுக்கும் வடிவேலு - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவை பழிவாங்க முகத்தில் ஆசிட் ஊற்ற முடிவு எடுக்கும் வடிவேலு, அடுத்து நடக்க போவது என்ன என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் சிதம்பரம் வீட்டில் அனைவரும் விருந்து சாப்பிட்டு முடித்து விட்டு பைனான்ஸ் கடை சாவியையும் கணக்கு வழக்கு நோட்டையும் எடுத்து மாப்பிள்ளை இனிமே நீங்க தான் பைனாஸ் கடையை பார்த்துக்கனும் என சொல்லி பழனியிடம் ஒப்படைக்க போகும் சமயம் அங்கு வரும் அமுதா சாவியை தட்டி விட்டு பழனியை அறைய அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அடுத்து சிதம்பரம் அமுதாவிடம் தனது வீட்டுக்கு வந்த மருமகனை கை நீட்டி அடிக்க உனக்கு என்ன தைரியம் என திட்ட அமுதா பழனி தீ வைத்ததற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாக சொல்லி அமுதா வீடியோவை காட்ட அதில் வடிவேலு மட்டும் இருக்க அமுதா அதிர்ச்சி அடைகிறாள்.

இதனால் சிதம்பரம் அமுதாவை வெளியே போக சொல்ல அமுதா பழனி தவறானவன் என சொல்ல, சிதம்பரம் கோபத்துடன் உன் குடும்பம் தான் தப்பான குடும்பம் என சத்தம் போட அமுதாவிடம் குமரேசனுக்கு ஆதரவாக வடிவேலு சண்டையிட, அன்னம் உன் சித்தப்பா யோக்கியதை தெரியும் எனவும் அமுதாவிடம் அவர்கள் மோசமானவர்கள் பிரச்சனை வேண்டாமென அன்னலட்சுமி சொல்கிறாள்.

அடுத்து உமாவும் பழனியும் அமுதாவை ஏதாவது செய்ய வேண்டும், அவளோட திமிரு அடங்கவில்லை என பேச அப்போது வடிவேலு வருகிறான். உமா அவனிடம் உங்க அண்ணன் பழனிக்காக நீ என்ன செய்வ என கேட்க உன்னை உன் மாமானார் முன்னாடி நகையை மாத்தி அசிங்கப்படுத்திட்டா, உன் கிட்ட இருந்த கடையையும் பிடுங்கிட்டா, என்னை அடிச்சி அசிங்கப்படுத்திட்டா, எல்லாத்துக்கும் மேல என் புருஷன் மேலயே கை வைச்சிட்டா என ஆத்திரத்துடன் சொல்ல, வடிவேலு அவர்களிடம் நாளைக்கு ஒரு சம்பவம் பண்ணிரலாம் என சொல்கிறான்.

பழனி நம்ம மேல சந்தேகம் வரக் கூடாது என சொல்ல வடிவேலு வராதுன்னே மார்கெட் போயிட்டு சந்துல வரும் போது ஒரு மேட்டரை பண்ணிடலாம் என சொல்கிறான். அடுத்த நாள் அமுதா மார்கெட்டுக்கு சென்று திரும்பி வரும் போது அடி தடி நடப்பது போல செட்டப் செய்து வடிவேலு முகத்தில் துணியை சுத்தியபடி அமுதா மேல் ஆசிட் ஊற்றப் போகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... அண்ணாவின் வேலைக்காரியால் மவுசு குறைந்த கிருஷ்ண விஜயம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv