• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மகளுடன் செம ஆட்டம் போட்ட சீரியல் நடிகை - வீடியோ

மகளுடன் செம ஆட்டம் போட்ட சீரியல் நடிகை - வீடியோ

சீரியல் நடிகை கவிதா

சீரியல் நடிகை கவிதா

சீரியல் நடிகை கவிதா தனது மகளும் இணைந்து ஆடிய குத்தாட்டம் ஒன்றை தனது இன்ஸ்டா ரீலில் ஷேர் செய்துள்ளார் .

  • Share this:
தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகை கவிதா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக பிரபலமானவர் நடிகை கவிதா. இவர் 2003-ம் ஆண்டில் சன் டிவி-யில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர். இந்த சீரியலில் ரோகினி என்ற கேரக்டரில் அறிமுகமானார் நடிகை கவிதா. அது முதல் தற்போது வரை தொடர்ச்சியாக ஏராளமான சீரியல்களில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிகை கவிதா நடித்து வரும் நிலையில் இவருடன் அறிமுகமான பல சின்னத்திரை நடிகைகள் 40 வயதை கடந்து விட்டதால் சின்னத்திரையில் தலைகாட்டாமல் உள்ளனர். அப்படியே நடித்தாலும் வயதான வேடங்களில் தான் நடித்து வருகின்றனர்.



ஆனால் 40 வயதை கடந்தாலும் இன்னும் இளமையாகவே தோற்றமளிக்கும் நடிகை கவிதா ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் மாமியார் வேடத்தை ஏற்று நடித்து வருவதை பல ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை. காரணம் பார்ப்பதற்கு இளவயதில் இருப்பது போல தோற்றம் இருப்பதால் மாமியார் வேடம் அவருக்கு பொருந்தவில்லை என்று கூறி வருகின்றனர். சேலத்தை சேர்ந்த இவர் உறவுகள் சங்கமம், நீலி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, வள்ளி, நிலா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.



Photos : நடிகை ஸ்ருதி ஹாசனின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலிலும் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார் நடிகை கவிதா சோலைராஜ். வயதானாலும் இன்னும் தன் அழகு குறையவில்லை என்பதை எடுத்து காட்டும்விதமாக அவ்வப்போது தனது செல்பி ஃபோட்டோ மற்றும் மகளுடன் தான் எடுத்து கொள்ளும் ஃபோட்டோ என சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளுவார் நடிகை கவிதா.



இந்நிலையில் இவரும், இவரது மகளும் இணைந்து ஆடிய குத்தாட்டம் ஒன்றை தனது இன்ஸ்டா ரீலில் ஷேர் செய்துள்ளார் கவிதா. காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம்பெற்ற நாக்க மூக்க பாடலுக்கு தான் தாயும், மக்களும் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் கவிதாவின் மகள் பார்ப்பதற்கு அவரது ஜாடையிலேயே இருக்கிறார். நடிகை கவிதாவும் இன்னும் ஸ்லிம்மாகவே இருப்பதால் ஆடுவதில் யார் அம்மா, யார் மகள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்த ரீல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அழகான நடனம், குத்துனா இதான் குத்து என்று கமெண்ட் செக்ஷனில் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: