இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ரசிகர்களுக்கு சன் டிவி மிகப் பெரிய சர்ப்பிரைஸ் தர போகிறது. இதுக் குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்சங்கர் ராஜா. அப்போது அவருக்கு வயது 16. இந்த படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பி மற்றும் மகாநதி ஷோபனா, பாடிய "ஈர நிலா விழிகளை மூடி" பாடல் யாரு இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் என கேட்க வைத்தது. ஆனால், அந்தப் படம் வெளியாகி சில ஆண்டுகள் வரை யுவனுக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதுவரை தன்னை மெருகேற்றி கொண்டிருந்த யுவன், அதன் பின்பு பிஜிஎம் கிங்காக களம் இறங்கி கலக்க தொடங்கினார். யுவனின் இசையில் வெளியான தீனா, துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலணி, பில்லா, மெளனம் பேசியதே என அடுத்தடுத்த படங்கள் அவரை இளைஞர்களின் ஃபேவரெட்டாக மாற்றியது.
பாலிவுட் ஹீரோக்களை திட்டிய மாதவன்.. அவார்ட் விழாவில் நடந்த சுவாரசியம்- பழைய வைரல் வீடியோ
இளையராஜாவின் மகனான யுவன்,தற்போது இசையமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார். இதுவரை 100 க்கும் அதிகமான படங்களில் யுவன் பணியாற்றி விட்டார்.பல விருதுகளையும் வென்றுள்ளார். யுவன், தமிழ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது. அவருடன் சேர்ந்து ரசிகர்களும் கொண்டாட சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த மே மாதம் 7 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் நடைப்பெற்ற யுவன் 25 நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் டி.இமான், டைரக்டரும் நடிகருமான செல்வராகவன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சென்னை என்னுடைய மற்றொரு தாய் வீடு – தோனி மீண்டும் நெகிழ்ச்சி
ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி கொண்டு நேரில் சென்று யுவனின் லைவ் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இந்நிலையில் இதை நேரில் பார்க்க முடியாதவர்களுக்காக சன் டிவி அதை டிவியில் டெலிகாஸ்ட் செய்ய முடிவு எடுத்துள்ளது.கூடிய விரைவில் யுவனின் 25 இசை நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
வார இறுதியில் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக சன் டிவி யுவனின் இசை நிகழ்ச்சியை டெலிகாஸ்ட் செய்ய உள்ளதாம். இந்த தகவல் யுவன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லை, இசை நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியாமல் மிஸ் செய்வதர்கள் வீட்டில் இருந்தப்படியே குடும்பத்துடன் இதை கண்டுக்களிக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sun TV, Yuvan Shankar raja