யூ-ட்யூப் பிரபலம் சுதாகரின் திருமணம் நேற்று மணச்சநல்லூரில் நடைப்பெற்றது.
தமிழில் பிரபல யூடுயுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனலில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இருவரும் இணைந்து மீசைய முறுக்கு, ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.
இவர்களின் வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. முதலில் மெட்ராஸ் சென்ட்ரல் யூ-ட்யூப் சேனலில் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருந்த கோபியும், சுதாகரும் பின்னர் தங்களுக்கென ‘பரிதாபங்கள்’ என்ற சேனலை உருவாக்கினர்.
தற்போது கோபி மற்றும் சுதாகர் இருவரும் தங்களின் கனவுப் படத்திற்கான முன் தயாரிப்பில் உள்ளனர். இதற்காக அவர்கள் எட்டு கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். அந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
இதற்கிடையே சுதாகருக்கு கடந்த டிசம்பரில் லட்சுமி குமாரி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. தொடர்ந்து நேற்று காலை மணச்சநல்லூரில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. இதில் குடும்பத்தினர், கோபி உள்ளிட்ட நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.