ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யூ-ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர் நிச்சயதார்த்தம்!

யூ-ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர் நிச்சயதார்த்தம்!

சுதாகர் நிச்சயதார்த்தம்

சுதாகர் நிச்சயதார்த்தம்

முதலில் மெட்ராஸ் சென்ட்ரல் யூ-ட்யூப் சேனலில் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருந்த கோபியும், சுதாகரும் பின்னர் தங்களுக்கென ‘பரிதாபங்கள்’ என்ற சேனலை உருவாக்கினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரபல யூடியூபர் சுதாகரின் திருமண நிச்சயதார்த்தம் சிவகாசியில் நடந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், சுதாகரின் நெருங்கிய நண்பரும் யூ-ட்யூபருமான கோபி மற்றும் குடும்பத்தினர் சுதாகரின் நிச்சயதார்த்த விழாவை சிறப்பித்தனர்.

யூ-ட்யூப் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்களின் வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. முதலில் மெட்ராஸ் சென்ட்ரல் யூ-ட்யூப் சேனலில் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருந்த கோபியும், சுதாகரும் பின்னர் தங்களுக்கென ‘பரிதாபங்கள்’ என்ற சேனலை உருவாக்கினர்.

சுதாகரை பொறுத்தவரை பரிதாபங்கள் சேனலின் கண்டெண்டுகளுக்கு வசனம் எழுதுவது மட்டுமின்றி, யாஷிகா ஆனந்த் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து ’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ மற்றும் 'உறியடி 2' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது கோபி மற்றும் சுதாகர் இருவரும் தங்களின் கனவுப் படத்திற்கான முன் தயாரிப்பில் உள்ளனர். இதற்காக அவர்கள் எட்டு கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். அந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: