Home /News /entertainment /

மதன் கவுரிக்கு நடந்தது ஏன் இர்பானுக்கு நடக்கவில்லை? குமுறும் ரசிகர்கள்! என்ன நடந்தது?

மதன் கவுரிக்கு நடந்தது ஏன் இர்பானுக்கு நடக்கவில்லை? குமுறும் ரசிகர்கள்! என்ன நடந்தது?

யூடியூப் இர்பான்

யூடியூப் இர்பான்

youtuber irfan : சில நாட்களுக்கு முன்பு யூடியூப்பர் மதன் கவுரி தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார்

    ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் அதற்கு முன்பு போல் வெள்ளித்திரையில், சின்னத்திரயில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. யூடியூப்பில் சேனல் தொடங்கினாலே போது, ஈஸியாக பிரபலம் ஆகிடலாம். ஒரு பக்கம் பணமும் கிடைக்கும், கூடவே பப்ளிசிட்டியும் நிச்சயம் வந்து சேரும். அதற்கு உங்களிடம் கொஞ்சம் கன்டெண்டும், சரளமாக பேசும் திறமை இருந்தாலே போதும் நீங்களும் யூடியூப் பிரபலம் தான். அந்த வகையில் ஃபுட் ரிவியூ என்ற  ஒன்லைனில் தொடங்கிய இர்பான் பயணம் இன்று பிரம்மாணடமாக வளர்ந்துள்ளது.

    அரை டவுசர் அணிந்தப்படி  ஃபுட் ரிவியூ. அது உள்ளுர், வெளிநாடு எதுவாக இருந்தாலும் சரி அரை டவுசர் தான் இர்பானுக்கு பிடித்தமான உடை. ஜாலியாக போய் அந்த ஹோடலின் சிறப்பான உணவை சாப்பிட்டு அவர் பணியில் ரிவியூ கொடுப்பார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் அள்ளும். இர்பான் சாப்படுவதை பார்த்து ரசிக்கவே ஒரு தனி கூட்டம் இருக்கிறது. இப்போது இருக்கும் பல ஃபுட் ரிவியூ சேனல்களுக்கு பிள்ளையார் சுழி யார் என்றால் இர்பானை கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். பல ஹோட்டல்கள் இர்பானை அழைத்து தங்கள் ஹோட்டல் உணவுக்கு ரிவியூ கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.

    ஒருமுறை தனியார் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  உலகநாயகன் கமல்ஹாசன் கூட இர்பான் வீடியோ பற்றி வியந்து பேசி இருந்தார். இர்பான் சாப்பிடுவதை பார்த்து தனக்கே பொறாமையாக இருக்கும் என்றும் அவர் மேடையில் குறிப்பிட்டிருந்தார். இப்படி இர்பானின் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவருக்கு நிச்சயார்த்தம் முடித்திருந்தது. தனது நிச்சயார்த்த புகைப்படத்தை பகிர்ந்திருந்த இர்பானுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். நல்ல வேளை நிச்சயதார்த்ததிற்கும் இர்பான் டவுசர் உடன் வரவில்லை என பலரும் நக்கல் செய்து இருந்தனர்.

    நிச்சயத்திற்கு பிறகு கல்யாணம் என காத்துக் கொண்டிருந்த இர்பான் ரசிகர்களுக்கு, அதிர்ச்சி தகவல் ஒன்றை சொல்லி இருக்கிறார் இர்பான். அதாவது, இர்பான் கல்யாண தேதி குறித்து ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக வீடியோ ஒன்றை இர்பான் வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க... என்ன சிம்ரன் இதெல்லாம்? சூப்பர் சிங்கர் பிரபலத்தின் ஃபோட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!

    ”அதில், ரசிகர்களின் கவனத்திற்கு என்னுடைய கல்யாணம் நின்றுவிட்டது. தள்ளி வைக்கவில்லை, என்னுடைய எண்ணங்களும் அவங்களுடைய எண்ணங்களும் சரியாக பொருந்தவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன்.முதலில் என்னுடைய முடிவை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை ஆஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுத்தார்கள். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்.



    பிறகு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பெண் வீட்டிலும் என்னுடைய சூழ்நிலை எடுத்து சொன்னேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். தயவு செய்து இனிமேல் திருமணம் பற்றி கேட்காதீர்கள்” என்று கூறியுள்ளார். இர்பானின் இந்த வீடியோ அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பல யூடியூப் பிரபலங்களுக்ல்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ராம் ஜானு ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு யூடியூப்பர் மதன் கவுரி தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில், ஜாலியான ஆளு இர்பானுக்கு மட்டும் ஏன் இப்படி என அவரின் ரசிகர்கள் சோகத்துடன் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food, Youtube

    அடுத்த செய்தி