ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெகுளிதானே உண்மை.. பிக்பாஸில் ஜெயிப்பாரு ஜிபி முத்து - சோஷியல் மீடியாவில் உருவான ஆர்மி!

வெகுளிதானே உண்மை.. பிக்பாஸில் ஜெயிப்பாரு ஜிபி முத்து - சோஷியல் மீடியாவில் உருவான ஆர்மி!

ஜிபி முத்து

ஜிபி முத்து

பணம், புகழ் கிடைத்தாலும் ஜி.பி.முத்து தனது பழசை மறக்காமல் இன்னமும் வெகுளித்தனமாக இருந்து வருகிறார் என்று அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த டிக் டாக் நாயகன் ஜி.பி.முத்து பங்கேற்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

  இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களிலேயே, மிக அதிகமான ரசிகர்களை கொண்ட ஒருவராக இருப்பவர் தான் ஜி.பி.முத்து. டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் என வீடியோ தளங்கள் எந்தப்பக்கம் சென்றாலும், அங்கு ஜி.பி.முத்துவின் வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆவது வழக்கம்.

  பிக் பாஸ் 6 போட்டியாளர்களிலேயே அதிக பிரபலம் என்பதால், ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கண்ணும் அவர் பக்கம் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்மார்க் நெல்லை  தமிழில் தன்னை கிண்டல் செய்யும் நபர்களை ஜி.பி.முத்து திட்ட கூடிய வார்த்தைகள் பலமுறை ரசிக்கும் விதமாக இருக்கும். சில நேரங்களில் இரட்டை அர்த்தங்களில் பேசி தானாகவே சிக்கலை ஏற்படுத்தி விடுவார் ஜி.பி.முத்து.

  கடந்த பிக்பாஸில் கொஞ்சத்தில் மிஸ்.! இந்தமுறை தட்டித் தூக்குவாறா அஸிம்?

  தனது பிரபலத்தின் மூலம் ஜி.பி. முத்துவுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. இருப்பினும் பணம், புகழ் கிடைத்தாலும் ஜி.பி.முத்து தனது பழசை மறக்காமல் இன்னமும் வெகுளித்தனமாக இருந்து வருகிறார் என்று அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

  பட வாய்ப்பு கிடைத்தாலும் பிக் பாஸ் வாய்ப்பு என்பது முத்துவின் வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இதேபோன்று பிக்பாஸ் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் மிகப்பெரும் என்டர்டைன்மென்ட்டை ஜி.பி.முத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

  சிம்பு பட நாயகியுடன் ஜோடி சேரும் ஆர்யா! தொடங்கியது புதிய படம்!

  இந்த சூழலில் மனம் கவர்ந்த நாயகன் ஜி.பி.முத்துவுக்காக சமூக வலைதளங்களில் ஆர்மி உருவாகியுள்ளன. பிக்பாஸ் முதல் சீசனின் போது ஓவியாவுக்கு உருவான ஆர்மி சோசியல் மீடியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த வகையில் ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் பட்டாளம் என்ன மாதிரியான புரமோஷன்களை அவருக்கு வழங்கப் போகிறது என்பதை இன்னும் சில நாட்களில் பார்த்துவிடலாம்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6