Home /News /entertainment /

விபத்தால் வாய்ப்பை இழந்த பிரபல சீரியல் நடிகர்! உடனே நடந்த மாற்றம்

விபத்தால் வாய்ப்பை இழந்த பிரபல சீரியல் நடிகர்! உடனே நடந்த மாற்றம்

யூடியூபர் இனியன்

யூடியூபர் இனியன்

இனியன் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவர் சில மாதங்களுக்கு கேரளாவில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

    சீரியல்களில் ஒரு கேரக்டர் மக்களிடம் நன்கு பரீட்சையமான பின்பு அந்த கேரக்டரில் வேற ஒரு நடிகர், நடிகை நடிப்பது சின்னத்திரையில் தொடர் கதையாக மாறிவிட்டது. குறிப்பாக பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் இதுப் போன்று நடப்பது அந்த சீரியலின் ரேட்டிங்கை பெரிதும் பாதிக்கிறது. விஜய் டிவி நம்பர் 1 சீரியலாக இருந்த பாரதி கண்ணம்மாவுக்கும் இதுதான் நடந்தது. ரோஷினி என்ற அவரின் நிஜப் பெயரை மறந்து மக்கள் கண்ணம்மா கண்ணம்மா என்று தான் அழைப்பார்கள். அப்படி இருக்கையில் திடீரென்று ரோஷினி சீரியலை விட்டு விலகினார்.

    அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் எந்த குறையும் இல்லை ஆனாலும் சீரியல் ரேட்டிங்கில் முன்பு இருந்தது போல் இல்லை. இதுப்போல் பல சீரியல்களில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சன் டிவி பூவே உனக்காக பூவரசி ரோல், வானத்தை போல அண்ணன் - தங்கை ரோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா ரோல், ராஜா ராணி 2 சந்தியா அண்ணன் ரோல், காற்றுக்கென்ன வேலி சூர்யா ரோல், நாம் இருவர் நமக்கு இருவர் 2 மகா ரோல், சமீபத்தில் ராஜா ராணி சந்தியாவாக நடிக்கும் ஆல்யாவே மாற்றப்பட்டு விட்டார். இப்படி பெரிய லிஸ்டே இருக்கிறது. இதில் சில நடிகர், நடிகைகள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருக்கிறார்கள். சிலரை இயக்குனர்கள் மாற்றியுள்ளார்கள். ஆனாலும் இதுப்போன்ற மாற்றத்தை மக்கள் விரும்புவதில்லை என்பதே உண்மை.

    பரபரப்பான திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.. முல்லைக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது!

    இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் வித்யா நம்பர் 1 சீரியலில் லீட் ரோலில் சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரபல யூடியூபர் இனியன். இவருக்கு இது முதல் சீரியல் ஆகும். யூடியூப்பில் இருந்து நேரடியாக சின்னத்திரையில் களம் இறங்கினார். பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கி இருக்கிறார்.  இவரின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து இருந்தது. இந்நிலையில், தற்போது இனியன் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் அவர் சில மாதங்களுக்கு கேரளாவில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

    இதையும் படிங்க.. அந்த தகவலை நம்ப வேண்டாம்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பற்றி பரவிய வதந்தி!



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress_)






    இந்த காரணத்தினால் சீரியலில் அவரால் இனி தொடர்ந்து நடிக்க முடியாது. அதனால் அவரின் கதாபாத்திரத்தில் சஞ்சயாக இனி ஜீ தமிழ் புகழ் நடிகர் புவியரசன் நடிக்கவுள்ளார். இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர். ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடர் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்த புவி தான் இனி வித்யா நம்பர் 1 சீரியல் ஹீரோ.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி