ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

யாஷிகாவுடன் பிரேக்கப் ஆனது உண்மையா? பிக் பாஸ் நிரூப் சொன்ன அதிர்ச்சி கலந்த உண்மை!-

யாஷிகாவுடன் பிரேக்கப் ஆனது உண்மையா? பிக் பாஸ் நிரூப் சொன்ன அதிர்ச்சி கலந்த உண்மை!-

நிரூப்

நிரூப்

யாஷிகா, இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே நிரூப்பை காதலித்து வந்துள்ளார்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  நிரூப் நந்தகுமார் பிரபல மாடல் ஆவார். மேலும் தொழிலதிபரான இவர் பெங்களூரில் ஒரு ஆட்டோமேஷன் கம்பெனி, சென்னையில் க்ளவுட் கிச்சன் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஆனால் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதனால் பல ஆடிசனுக்கு சென்றிருக்கிறார். சமீபத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

  ஆரம்பத்தில் தனது நீளமான முடியால் பேமஸ் ஆன நிரூப், கடந்த சில தினங்களுக்கு முன்பாக முடி வெட்டி ஷார்ட் ஹேரில் கொடுத்த லுக் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்தது. கேன்சர் நோயாளிகளுக்காக தனது முடிவை வளர்ப்பதாக நிரூப் கூறி இருந்தார்.

  மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய நிரூப், நடிகை யாஷிகாவால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக மிகவும் பெருமையாக பேசினார். இதனை தொடர்ந்து டாஸ்குகளில் சாதுர்யமாக சிந்தித்து விளையாடிய நிரூப் இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக தேர்வானார். இறுதியாக 5 பேர் இருந்த நிலையில் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் முதல் நபராக நிரூப் நந்தகுமார் வெளியேறினார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் வீடியோ ஒன்றை வெளியிருந்த நிரூப், 105 நாட்களுக்கு பிறகு வெளியே வந்திருக்கேன், உலகமே நிறைய மாறியிருக்கு, என்ன பண்ணப்போறன் தெரியலை. உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.

  இதையும் படிங்க.. வெப் தொடரை இயக்கும் வெற்றிமாறன்!

  இதனை தொடர்ந்து பல்வேறு தனியார் தொலைகாட்சிகளிலும் பேட்டி அளித்து வருகிறார். அதில், சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷிகாவை காதலித்தது உண்மைதான் என்று நிரூப் கூறி இருக்கிறார். எங்களுக்குள் பிரேக் அப் ஆகிவிட்டதாகும், தற்போது நண்பர்களாக இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார். மேலும் பிரேக்கப் பற்றி பேசிய அவர் எங்களுக்கு செட் ஆகாததால் பேசி பிரிந்துவிட்டோம் என கூறியுள்ளார்.

  பிக் பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியின் போட்டியாளரான யாஷிகா, இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே நிரூப்பை காதலித்து வந்துள்ளார். ஒருமுறை லைவ் வீடியோவில் யாஷிகா, ஐஸ்வர்யா பேசிக்கொண்டிருக்கும்போது நிரூப் வந்து யாஷிகாவிற்கு உதட்டில் லிப் கிஸ் கொடுத்திருந்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

  இதனிடையே யாஷிகாவிற்கு விபத்து ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நலமாக இருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 5ல் நிரூப்பை பார்ப்பதற்காக யாஷிகா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'நாங்கள் பிரிந்துவிட்டோம்' என நிரூப் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv