முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கல்யாணத்தை பற்றி பேசிய யாஷிகா ஆனந்த்.. நிரூப் அவருக்கு என்ன உறவு தெரியுமா?

கல்யாணத்தை பற்றி பேசிய யாஷிகா ஆனந்த்.. நிரூப் அவருக்கு என்ன உறவு தெரியுமா?

யாஷிகா - நிரூப்

யாஷிகா - நிரூப்

யாஷிகாவிடம் ஒரு ரசிகர் நிரூப்பிற்கும் உங்களுக்கும் எப்போது கல்யாணம்? என கேட்டார்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகும் பலர் உடனே மக்களிடம் பிரபலம் அடையாவிட்டாலும், சின்னதிரையில் டெலிகாஸ்ட் ஆகும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அதன் பிறகு பிஸியாகி விடுகின்றனர். அதே போல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறி செல்லும் பிரபலங்களையும் பார்க்க முடிகிறது. வெள்ளித்திரையில் கடந்த 2016-ல் கவலை வேண்டாம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானாவர் யாஷிகா ஆனந்த்.

எனினும் டைரக்டர் கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பின்னர் பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அடல்ட் திரைப்படமாக வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து இளம்ரசிகர்களை ஈர்த்தார். மேலும் இவரது தாராள கவர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் ரசிகர்கள் பெருகினர்.

இதையும் படிங்க.. லட்சுமிக்கு உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா… அடுத்த கட்டத்துக்கு நகரும் பாரதி கண்ணம்மா!

இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக சின்னத்திரையில் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் பிக்பாஸின் சீசன் 2-வில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸில் பங்கேற்க இவர் துவக்கத்தில் கேமில் ஆர்வம் காட்டியதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அனால் நாள் செல்ல செல்ல அவரது கவனம் வேறு திசையில் சென்றதால் பிக்பாஸின் டிரேட் மார்க்கான சண்டை , சச்சரவு மற்றும் சர்ச்சைகளில் சிக்கினார்.


எனினும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு ரசிகர்களின் ஆதரவு மேலும் பெருகியது. இதனிடையே கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கிய நடிகை யாஷிகா பல காயங்களுடன் தீவிர சிகிச்சைகளுக்கு பிறகு உயிர் பிழைத்தார். இதனிடையே பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்ற நிரூப் நந்தகுமார்,  யாஷிகா  ஐஸ்வர்யாவும்,  சோஷியல் மீடியாவில் லைவில் இருந்த போது லிப்லாக் கிஸ் அடித்தவர் ஆவார். இந்நிலையில்  யாஷிகா இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் Q & A செஷனை நடத்தினார்.

அப்போது யாஷிகாவிடம் ஒரு ரசிகர் நிரூப்பிற்கும் உங்களுக்கும் எப்போது கல்யாணம் என கேட்டார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். தற்போதைக்கு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை" என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் நடிகை யாஷிகா பதில் அளித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5, Vijay tv, Yashika Anand