• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yashika Anand: மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த் - மனதை உருக்கும் படம்

Yashika Anand: மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த் - மனதை உருக்கும் படம்

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

படுக்கையில் படுத்திருக்கும் யாஷிகா, வலது காலில் கட்டுப்போட்டு, தலையணை மேல் வைத்திருக்கிறார். படத்தைப் பார்க்கும் போது, அவர் பலத்த காயத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிகிறது.

  • Share this:
    சாலை விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    Yashika Anand latest picture from hospital goes viral, yashika anand latest news in tamil, yashika anand, yashika anand car accident, yashika anand latest news, yashika anand health condition, yashika anand accident, yashika anand, yashika anand latest condition, yashika anand hospital photos, yashika name meaning, yashika instagram, yashika age, yashika anand salary, yashika friend, yashika aannand ragalahari, yashika aannand twitter, yashika anand driving licence, யாஷிகா ஆனந்த், யாஷிகா ஆனந்த் கார் விபத்து, யாஷிகா ஆனந்த் தோழி மரணம், யாஷிகா ஆனந்த் ஓட்டுநர் உரிமம், யாஷிகா ஆனந்த் படங்கள், bigg boss yashika, yashika
    மருத்துவமனையில் யாஷிகா


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது உடல்நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, அடுத்த 5 மாதங்களுக்கு தான் படுக்கையிலேயே தான் இருக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல எலும்பு முறிவுகளால் யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. படுக்கையில் படுத்திருக்கும் யாஷிகா, வலது காலில் கட்டுப்போட்டு, தலையணை மேல் வைத்திருக்கிறார். படத்தைப் பார்க்கும் போது, அவர் பலத்த காயத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: