மீண்டும் பிக்பாஸில் யாஷிகா ஆனந்த்?

யாஷிகா ஆனந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

மீண்டும் பிக்பாஸில் யாஷிகா ஆனந்த்?
யாஷிகா ஆனந்த்
  • News18
  • Last Updated: June 27, 2019, 7:47 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் அழைத்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே காதல், மோதல் என்று அமர்க்களமாக தொடங்கியுள்ளது.


இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்திடம் நீங்கள் மீண்டும் பிக்பாஸில் கலந்து கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு, ‘நிச்சயமாக கலந்து கொள்வேன். ஆனால் போட்டியாளராக என்னால் கலந்து கொள்ள முடியாது, கெஸ்டாக அழைத்தால் நிச்சயம் செல்வேன். பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்’ என்று யாஷிகா ஆனந்த் பதிலளித்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகா ஆனந்தும் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, வெளியில் செல்வது என்று நெறுங்கிய தோழிகளாக மாறினர்.

Also watch
First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading