Home /News /entertainment /

அவளை ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும்... ஸ்ரீநிதியின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நக்‌ஷத்ரா

அவளை ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும்... ஸ்ரீநிதியின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நக்‌ஷத்ரா

நக்‌ஷத்ரா - ஸ்ரீநிதி

நக்‌ஷத்ரா - ஸ்ரீநிதி

அவள ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும், அவ கொஞ்ச நாளா ஏதோ டிப்ரஷன்ல பண்ணிட்டு இருக்கா. ஸோ நீங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்.

    தன்னை விமர்சித்த நடிகை ஸ்ரீநிதிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா.

    சமீபமாக அதிக சர்ச்சைகளில் நடிகை ஸ்ரீநிதியின் பெயர் அடிப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்து இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் நடித்து வந்த அவர், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். சிம்புவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதற்கிடையே சீரியல் நடிகை நட்சத்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியிருந்தார் ஸ்ரீநிதி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் 'வெண்ணிலா' என்கிற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருந்தார் நட்சத்திரா. இதன் மூலம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    நட்சத்திரா, செம்பருத்தி ஷபானா, ஸ்ரீநிதி, ரேஷ்மா, சைத்ரா ரெட்டி ஆகியோர் நெருங்கிய தோழிகளாக இணையத்தில் வலம் வந்தனர். இவர்கள் கொரோனா ஊரடங்கில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடித்தன. இவர்களில் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா மூவருமே திருமணம் செய்துக் கொண்டு பிஸியாகினர்.

    இணையத்தில் லீக்கான நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமீபத்தில் ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவில், நக்‌ஷத்திராவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகியதாகவும், அவர் நல்லவர் இல்லை என்றும், அவரது மொத்த குடும்பமும் நட்சத்திராவை ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவை டெலீட் செய்து விட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by nakshathra (@nakshathra_official)






    இந்நிலையில் ஸ்ரீநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நக்‌ஷத்திரா, “2-3 நாளா நான் எதோ பிரச்னைல இருக்குறதாவும், நா லவ் பண்றவரோட குடும்பம் என்ன இறுக்கி பிடிச்சி வச்சிருப்பதாகவும் ஒரு விஷயம் பரவிட்டு இருக்கு. அவள ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும், அவ கொஞ்ச நாளா ஏதோ டிப்ரஷன்ல பண்ணிட்டு இருக்கா. ஸோ நீங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனச்சேன். ஆனா எனக்கும், என் கூட இருக்கவங்களுக்கும் ஃபோன் பண்ணி, என்ன பத்தி விசாரிக்கிறீங்க. அதனால தான் இந்த வீடியோ. சத்தியமா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நல்லா இருக்கேன், சேஃபா இருக்கேன், நிம்மதியா இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Zee tamil

    அடுத்த செய்தி