Home /News /entertainment /

சின்னத்திரை மீரா ஜாஸ்மின்.. யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்ரா சொன்ன விஷயம்!

சின்னத்திரை மீரா ஜாஸ்மின்.. யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்ரா சொன்ன விஷயம்!

யாரடி நீ மோகினி நக்ஷத்ரா

யாரடி நீ மோகினி நக்ஷத்ரா

யாரடி நீ மோகினி சீரியலில் சாதுவான பெண்ணாக இவர் நடித்து வந்தார். ஆனால், தற்போது நடித்து வரும் வள்ளி திருமணம் சீரியலில் மிகவும் துணிச்சலான பெண் வேடத்தில் நடித்து வருகிறார்.

  சின்னத்திரை பிரபலங்கள் அவ்வப்போது சில பேட்டிகளை வழங்கி வருவது வழக்கம். இதில் குறிப்பாக அவர்களின் தற்போதைய புராஜெக்ட், எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறார்கள், அவர்களது வாழ்க்கை எப்படி செல்கிறது. திருமணம் எப்போது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை தந்திருப்பார்கள். அந்த வகையில் சின்னத்திரை பிரபலமான நக்ஷத்ராவும் சமீபத்தில் அவரை பற்றிய பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.

  நக்ஷத்ரா தனது சினிமா கேரியரை ஜீ தமிழ் டிவியின் முன்னணி சீரியலான 'யாரடி நீ மோகினி' மூலம் தொடங்கினார். இதில் இவரது சிறந்த நடிப்பிற்காகவே இல்லத்தரசிகளுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. அது மட்டுமன்றி இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியது. அந்த அளவிற்கு இவரின் முதல் சீரியலிலேயே மிக முக்கிய இடத்தை மக்கள் மனதில் பிடித்து விட்டார்.

  இந்த சீரியல் மிக வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் 'வள்ளி திருமணம்' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இதில் மிகவும் வித்தியாசமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி சீரியலில் சாதுவான பெண்ணாக இவர் நடித்து வந்தார். ஆனால், தற்போது நடித்து வரும் வள்ளி திருமணம் சீரியலில் மிகவும் துணிச்சலான பெண் வேடத்தில் நடித்து வருகிறார். இவரின் இந்த அபார மாற்றத்தை மக்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களை இவரின் சிறந்த தேர்வுகளின் மூலம் ஈர்த்து வருகிறார்.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் 5ல் சம்பளமே வேண்டாம் என்ற போட்டியாளர்! ஆனாலும் கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

  இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘வள்ளி திருமணம்’ சீரியலின் கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. வள்ளி கதாபாத்திரம் புதுமையாகவும் சவாலாகவும் இருக்கிறது. இது நான் முன்பு நடித்த வேடத்திற்கு நேர்மாறானது. இதன் கதை கேட்கும் போதே சண்ட கோழி படத்தில் வரும் நடிகை மீரா ஜாஸ்மினை கற்பனை செய்து கொண்டே இருந்தேன். ஒரு சீரியலில் வள்ளியைப் போல சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் சின்னத்திரை உலகில், இது அரிதானது, நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பினேன். அதனால் தான் இந்த சீரியலை தேர்வு செய்தேன்" என்று கூறியுள்ளார்.

  இதில் உள்ள வள்ளி கதாபாத்திரம் அல்லது முன்பு நடித்த வெண்ணிலா கதாபத்திரம், இவற்றில் உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்டபோது சுவாரசியமான பதில் ஒன்றை தந்தார். இவர் நிஜ வாழ்க்கையில் வள்ளியைப் போன்றவர். "வெண்ணிலா என்ற அப்பாவி மற்றும் ஆன்மீகப் பெண்ணாக நான் நடித்திருப்பதைப் பார்த்து, என் நண்பர்கள் அனைவரும் என் நிஜ பாத்திரத்தை கூறி கேலி செய்வார்கள். நான் ஜீன்ஸ் அணிந்திருந்தாலும், எல்லோரும் என்னை வெண்ணிலாவாக பார்கிறார்கள். ஆனால் என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், நிஜ வாழ்க்கையில் நான் வள்ளி போன்ற ஒரு பெண்," என்று அவர் கூறினார்.

  இதையும் படிங்க.. குக் வித் கோமாளி சீசன் 3ல் இணைந்த சூப்பர் சிங்கர் பரத் பற்றி உலா வரும் கருத்துக்கள்! உண்மை என்ன?

  நக்ஷத்ராவின் சொந்த ஊரான கொல்லம் பிடிக்குமா அல்லது தற்போது வாழ்கின்ற சென்னை பிடிக்குமா என்று கேட்டபோது, "கொல்லம் என்னுடைய சொந்த ஊர்; என்னை பெற்றெடுத்த ஊர். சென்னை எனக்கு பெயர் வைத்த நகரம். சென்னை என்னை ஆசீர்வதித்ததன் மூலம் நடிகை நக்ஷத்ரா என்று இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டேன். மேலும் தற்போது தேனி தான் என் கேரியரில் எனக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிற ஊர்" என்கிறார் நக்ஷத்ரா.

  இறுதியாக பெண்களின் கதாபாத்திர தேர்வு குறித்து கேட்டபோது, "எப்போது பெண் கதாபாத்திரம் தைரியமாக இருந்தாலும், அது எதிர்மறையான கதாபாத்திரமாகவே காட்டப்படும். பாசிட்டிவ் கேரக்டர், எவ்வளவு தைரியமாக இருந்தாலும், கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் தலையசைக்காத கதாபத்திரங்களில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். மக்களையும் சமூகத்தையும் முழுவதுமாக ஊக்குவிக்கும் பெண் கதாபத்திரங்களை அதிகம் பார்க்க விரும்புகிறேன்." என்று அழகிய சிரிப்புடன் விளக்கினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Zee tamil

  அடுத்த செய்தி