Home /News /entertainment /

மீண்டும் முத்தரசுடன் சேர போகிறாரா ஸ்வேதா? ’யாரடி நீ மோகினி’ சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

மீண்டும் முத்தரசுடன் சேர போகிறாரா ஸ்வேதா? ’யாரடி நீ மோகினி’ சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி

இந்த சீரியல் முடிந்த பின்பு யாரடி நீ மோகினி பாகம் 2 எடுக்கப்படும் எனவும் தகவல்கள் பரவின.

    சின்னத்திரையில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த சீரியல் ஜோடிகளான முத்தரசு, ஸ்வேதா சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் இணைய போகிறார்கள். இதுக் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் 'யாரடி நீ மோகினி' இதில் ஹீரோவாக ஸ்ரீகுமாரும், வில்லியாக சைத்ரா ரெட்டியும் அசத்தியிருந்தனர். அதிலும் சைத்ரா ரெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்களின் பெருத்த ஆதரவுக்கு மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்த தொடர் கடந்த ஆண்டு முடிவடைந்தது. பேய் கேரக்டரை வைத்து ஒரு அழகான குடும்ப கதையை நேர்த்தியாக நகர்த்தியதே இந்த சீரியல் வெற்றி அடைய முழு முதற்காரணம்.விறுவிறுப்பான மற்றும் சுவாரசியமான கதைக்களத்தில் ஆவி மற்றும் அமானுஷ்யம் போன்ற மசாலாக்களை சரியான விகிதத்தில் கலந்ததால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல்களின் பட்டியலில் இணைந்தது "யாரடி நீ மோகினி"

    நம்பவே முடியல.. ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனாவா இது!

    இந்த சீரியல் முடிந்த பின்பு யாரடி நீ மோகினி பாகம் 2 எடுக்கப்படும் எனவும் தகவல்கள் பரவின. ஆனால் அதுப்போல் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் பலரும் வேற சேனலில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஸ்வேதாவாக நடித்த சைத்ரா ரெட்டி சன் டிவி கயல் சீரியலில் லீட் ரோலில் நடிக்கிறார். வெண்ணிலா கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் சீரியலில் நடிக்கிறார். முத்தரசுவாக நடித்த ஸ்ரீ, சன் டிவி வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இப்படி இருக்கையில், இந்நிலையில் சைத்ரா ரெட்டியும், ஸ்ரீகுமாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்துவிட்டு இருவரும் புது சீரியலில் நடிக்கிறார்களா? அல்லது யாரடி நீ மோகினி சீசன் 2 வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் எந்த புதிய சீரியலிலும் சேர்ந்து நடிக்கவில்லை. வானத்தை போல சீரியலில் வரப்போகும் திருமண எபிசோடு காட்சியில் சைத்ரா ரெட்டி கெஸ்ட் என்ட்ரி கொடுக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது. அதுமட்டுமில்லை ஸ்ரீகுமாரை மிகவும் ஸ்பெஷலான அண்ணன் என்றும் சைத்ரா ரெட்டி கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி