ஜீ தமிழ் சேனலின் பக்கம் பெரும்பாலான சீரியல் ரசிகர்கள் திரும்ப 'யாரடி நீ மோகினி' ஒரு முக்கிய காரணம் ஆகும் என்றால் அது மிகையாகாது. ஸ்ரீகுமார், நட்சத்திரா மற்றும் சைத்ரா ரெட்டி உட்பட பல நடிகர், நடிகைகளை கொண்டு உருவான யாரடி நீ மோகினி சீரியல் தான் தென்னிந்திய தொலைக்காட்சியிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரண்டாவது தொடர் ஆகும். மேலும் மற்றொரு பிரபல சீரியலான 'செம்பருத்தி' க்கு பிறகு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான மிகவும் நீளமான இரண்டாவது தொடரும் யாரடி நீ மோகினி-யே ஆகும்.
தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்து, தற்போது ஜீ5 ஓடிடி தளம் வழியாக காணக்கிடைக்கும் யாரடி நீ மோகினி சீரியலில், பிரபல சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமார் முத்தரசன் என்கிற கேரக்டரின் வழியாக - வழக்கம் போல தன் அசாதாரணமான - நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை நட்சத்திரா, வெண்ணிலா என்கிற கேரக்டரின் வழியாக தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார். இவ்விருவரை விட முக்கியமாக, ஸ்வேதா என்கிற கேரக்டரில் மிகவும் கொடூரமான வில்லியாக சைத்ரா ரெட்டி பலரையும் தன் ரசிகர்களாக மாற்றினார்.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் எதிர் நீச்சல் சீரியல்.. ஜனனிக்காக சக்தி எடுத்த முடிவு!
இன்னும் சொல்லப்போனால், "இவ்ளோ அழகான வில்லியை நான் பார்த்ததே இல்லை" என்கிற பாசிட்டிவ் கமெண்ட்களுக்கும் சொந்தக்காரர் ஆனார், சைத்ரா ரெட்டி! இதன் விளைவாகவே சைத்ரா ரெட்டிக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' சீரியலின் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது சைத்ரா ரெட்டி 'கயல்' ஆக கலக்கி வருகிறார். இதற்கிடையில், நடிகர் ஸ்ரீகுமார் உடன் சைத்ரா ரெட்டி எடுத்துக்கொண்ட செல்பீ இன்ஸ்டாகிராமில் வெளியாகி டிவி சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெண்களின் ஆதர்ச நாயகன் மோகனின் 2வது ஆட்டம்!
நடிகர் ஸ்ரீகுமார், யாரடி நீ மோகினி சீரியலில் சைத்ரா ரெட்டி உடன் நடித்தவர் என்பது ஒருபக்கம் இருக்க, அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவருக்கு ஒருவர் சந்தித்த போது, நட்புக்காக ஒரு செல்பீ எடுத்துக்கொண்டு இருக்கலாம் என்பது போல் தெரிகிறது. ஆனாலும் கூட, ஜீ தமிழ் சேனலின் யாரடி நீ மோகினி ரசிகர்கள், இதை முத்தரசன் - ஸ்வேதா கதாபாத்திரங்களின் ரீயூனியன் ஆகவே பார்க்கிறார்கள்!
சன்டிவி சீரியல் ரசிகர்கள், ஸ்ரீகுமார் மற்றும் சைத்ரா ரெட்டியின் இந்த செல்பீக்கு பின்னால் ஒரு 'சங்கமம்' இருப்பதாக யூகித்த வண்ணம் உள்ளனர். அதாவது கயல் மற்றும் வானத்தை போல ஆகிய இரண்டு சீரியல்களின் சங்கமம் எபிசோட்கள் ஒளிபரப்பாகலாம்; அது தொடர்பான ஷூட்டிங்கின் போது தான் இந்த செல்பீ எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்பார்த்து வண்ணம் உள்ளனர். எது உண்மை? எது வெறும் யூகம் என்பது வரும் வாரங்களில் தெரிந்து விடும்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.