"நாடகம் முடியலாம்... நட்பு முடியாது" - யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் இன்ஸ்டாவில் உருக்கம்!

யாரடி நீ மோகினி

விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த வகையில் பல்வேறு ட்விஸ்ட்களுடன் அதிரடியாக சென்று கொண்டிருந்த யாரடி நீ மோகினி சீரியல் முடிந்துள்ளது சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமைடைய செய்துள்ளது.

  • Share this:
முன்னணி பிரபல தமிழ் சேனல்கள் அனைத்துமே தமிழ் சின்னத்திரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் காலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. ஞாயிற்று கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதன் மூலம், சின்னத்திரை ரசிகர்கள் எந்த அளவிற்கு சீரியல்களில் மூழ்கி உள்ளனர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். எனவே போட்டி போட்டு கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் சீரியல்களை களமிறக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன பிரபல தமிழ் சேனல்கள்.

அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிரபலசேனலான ஜீ தமிழில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. எனினும் இதுநாள் வரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியலாக இருந்தது "யாரடி நீ மோகினி" சீரியல் தான். அமானுஷ்யம், திகில் மற்றும் பாசம் உள்ளிட்ட பல விஷயங்களை சரி சமமாக கலந்து ரசிகர்களுக்கு இதுநாள் வரை விருந்தளித்து வந்த இந்த சீரியல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24 துவங்கிய யாரடி நீ மோகினி சீரியல் சுமார் 4 வருடங்களுக்கும் மேல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி 2021 ஆகஸ்ட் 23 (நேற்றுடன் ) நிறைவடைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த வகையில் பல்வேறு ட்விஸ்ட்களுடன் அதிரடியாக சென்று கொண்டிருந்த யாரடி நீ மோகினி சீரியல் முடிந்துள்ளது சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமைடைய செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று. யாரடி நீ மோகினி வெற்றி விழா என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஜீ தமிழ் ஒளிபரப்பியது. இதில் சீரியலில் நடித்த நடிகர்கள் மற்றும் சீரியல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Also read... சின்னத்திரை தான் நடிகை என்ற அங்கீகாரத்தை எனக்கு கொடுத்தது: மனம் திறந்த வாணி போஜன்!

இந்த சீரியலில் கவுதம் என்றார் கேரக்டரில் நடித்த சுர்ஜித் அன்சாரி, சோஷியல் மீடியா மூலம் ரசிகர்கள் தனக்கு அளித்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். கடல் கடந்து உத்யோகத்தில் ரஞ்சித்தாகவும், குல தெய்வத்தில் அமுதன் துரைப்பாண்டியாகவும், ரோஜாவில் ராஜேஷாகவும், பைரவிவில் சிவனாகவும், விதியில் தினேஷாகவும் நடித்துள்ளார் சுர்ஜித் அன்சாரி. சுர்ஜித் அன்சாரி பல சீரியல்களில் நடித்திருந்தாலும், யாரடி நீ மோகினி மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.







மேலும் சக நடிகர்களுடன் நலன் உறவை பேணி வருகிறார். இதனிடையே யாரடி நீ மோகினி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள சுர்ஜித் அன்சாரி சிலர் நாம் உருகி பாசம் வைப்பதற்கு தகுதியானவர்கள் என்று கூறி இருக்கிறார். "நாடகம் முடியலாம் நட்பு முடியாது"என்று கேப்ஷனிட்டு யாரடி நீ மோகினி சீரியல் குடும்பத்தின் மற்றொரு குரூப் போட்டோவை ஷேர் செய்து இருக்கிறார் சுர்ஜித் அன்சாரி.
Published by:Vinothini Aandisamy
First published: