பா ரஞ்சித் தயாரித்து வெளிவந்த 'ரைட்டர்' திரைப்படம் நாளை மே தினம் ஸ்பெஷலாக கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகிறது. அதே போல் இந்த திரைப்படம் உருவான விதம் குறித்து பா. ரஞ்சித் மற்றும் நடிகர் சமுத்திரகனி ஆகியோர் நியூஸ் 18 தமிழில் மனம் திறந்து பேசுகின்றனர்.
சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் விமர்சனம் ரீதியாக மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் தான் ரைட்டர். இந்த படத்தை பா .ரஞ்சித் தயாரித்து வெளியிட்டு இருந்தார். நடிகர் சமுத்திரகனி, ஹரிகிருஷ்ணன் மற்றும் இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். சமுத்திரகனி ஒரு காவல் நிலையத்தின் ரைட்டராக தங்கராஜ் என்ற பெயரில் படத்தின் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று இருந்தார். .உயர் போலீஸ் அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மீது பொய் வழக்கு போடத் துடிக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் அநீதி மற்றும் அவலங்களை இந்தப் படம் வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருந்தது.
உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலை தாண்டியது கே.ஜி.எஃப். 2… தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை நெருங்குகிறது…
இந்நிலையில், இந்த திரைப்படம் மே தினம் ஸ்பெஷலாக கலர்ஸ் தமிழில் நாளை மாலை 4.30 மணிக்கு முதன் முறையாக டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. திரையரங்குகளில் படத்தை பார்க்க தவறியவர்கள் நாளை 4.30 மணிக்கு கலர்ஸ் தமிழில் இந்த படத்தை பார்க்கலாம்.
அதுமட்டுமில்லை இந்த திரைப்படம் உருவானது குறித்தும், படத்தின் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் மற்றும் நடிகர் சமுத்திரகனி மனம் திறந்து பேசுகின்றனர். படத்தில் அரங்கேறிய சுவாரசியமான விஷயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடுகின்றனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியை நாளை காலை 10. 30 மணிக்கு மே தினம் ஸ்பெஷலாக நியூஸ் 18 தமிழில் கண்டுகளிக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.