ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காமெடி பாதி.. சீரியஸ் பாதி.! களைகட்டுமா பிக்பாஸ் வீடு? இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் லிஸ்ட்!

காமெடி பாதி.. சீரியஸ் பாதி.! களைகட்டுமா பிக்பாஸ் வீடு? இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் லிஸ்ட்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

Bigg Boss Tamil Season 6: யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என்ற கணிப்பும் எதிர்பார்ப்பும் சோஷியல் மீடியாவில் சூடு பிடித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. 6வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ளது. பிரம்மாண்ட செட்டுடன் புதுப்புது ரூல்ஸுடன் பிக்பாஸ் 6 தயாராகி வருகிறது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சின்னத்திரை, சோஷியல் மீடியா வைரல் நபர்கள் என பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் யார் என்ற ஆர்வம் தற்போதே சோஷியல் மீடியாவில் டாக்காக மாறிவருகிறது. இந்நிலையில் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என்ற கணிப்பும் எதிர்பார்ப்பும் சோஷியல் மீடியாவில் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் சிலரின் பெயர்களும் கசிந்துள்ளன.

  போட்டியாளர்கள் இவர்களா? 

  அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளான, ஆயிஷா, விஜே மகேஸ்வரி, விசித்ரா, ஸ்ரீநிதி, விஜய் டிவி மைனா உள்ளிட்டோர் பங்கேற்பாளர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருமே சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தவர்கள். குறிப்பாக ஸ்ரீநிதி தொடர்ந்து சோஷியல் மீடியாவில் டாக்காகவே இருந்தவர். அதேபோல் தன்னுடைய ஸ்டைல் காமெடியால் கலக்கும் ஜிபி முத்துவும் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த பிக்பாஸில் பேசப்பட்டு கடைசியில் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகாமல் சென்றார் ஜிபி முத்து. ரசிகர்கள் பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டாமென்று கூறியதால் தான் செல்லவில்லை என ஜிபி முத்து தெரிவித்திருந்தார். சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த தயாரிப்பாளர் ரவீர்ந்தரும் பிக்பாஸ் வீட்டுக்குள் காலடி வைப்பார் எனக் கூறப்படுகிறது. அதுபோக, நடிகை ஷில்பா மஞ்சுநாத், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அமுதவாணன் உள்ளிட்டோரும் பிக்பாஸ் எண்ட்ரியாவார்கள் எனத்தகவல் கசிந்துள்ளது. இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மட்டுமே கசிந்து வருகின்றன.

  இந்த முறை மிஸ் ஆகக்கூடாது..

  கடந்த பிக்பாஸ் 5 சீசனில் பங்கேற்பாளர்கள் பெரிய அளவில் மக்களிடையே ரீச் ஆகவில்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. அதனால் 5வது சீசனை பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த முறை அந்த குற்றச்சாட்டை நிவர்த்தி செய்துவிட வேண்டுமென பிக்பாஸ் பக்கா ப்ளானில் உள்ளதாம் . முடிந்தவரை சோசியல் மீடியா, சீரியல் உலகில் வைரலாகி இருக்கும் நபர்களை தேடித்தேடி டிக் அடித்துள்ளார்கள் என்பது தகவல்

  Published by:Murugadoss C
  First published: