சாண்டி வெற்றி பெற வேண்டும்... பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!

Web Desk | news18
Updated: July 9, 2019, 7:58 PM IST
சாண்டி வெற்றி பெற வேண்டும்... பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!
நடன இயக்குநர் சாண்டி
Web Desk | news18
Updated: July 9, 2019, 7:58 PM IST
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சாண்டி வெற்றி பெற வேண்டும் என்று காஜல் பசுபதி கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கியது. 16 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தில் வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் நடவடிக்கை காரணமாக அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர் வெளியேறினால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக ரசிகர்களால் கருதப்படும் நிலையில் நடன இயக்குநர் சாண்டி, லாஸ்லியோ உள்ளிட்டோர் அனைவராலும் பாராட்டப்படும் நபர்களாக மாறியுள்ளனர்.இந்நிலையில் நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பசுபதி தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் “பிக்பாஸ் வீட்டில் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் வனிதாதான். லாஸ்லியா தனியாக திட்டமிட்டு விளையாடுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால் சாண்டியாக இருந்தாலும், லாஸ்லியா, தர்ஷனாக இருந்தாலும் அந்த இடத்திலேயே பேசினால் நன்றாக இருக்கும்.

பிக்பாஸ் வீட்டில் ஆல் இன் ஆல் அழகு ராணி லாஸ்லியா தான். பிக்பாஸ் 3 டைட்டிலை சாண்டி ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் படங்கள்!

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...